Jaya Tv cookery program suvaiyo suvai
“சுவையோ சுவை”
ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பல சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.வாரந்தோறும் திங்கள் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர் பழனி முருகன் வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் புதுமையான முறையில் எளிய அசைவ உணவு வகைகளை இணையான உணவு வகைகளை விளக்கங்களுடன், சில சுவாரஸ்யமான குறிப்புகளுடன் தனது அனுபவங்களை புதுப்புது வகையான சமையல் விருந்துகளுடனும் , சுவாரஸ்யமாக வழங்கி வருகிறார் சமையல் கலை வல்லுநர் பழனி முருகன் .மேலும் இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தரும் உணவு வகை குறிப்புகளையும் பழனி முருகன் தனது பாணியில் சமைத்து காண்பிப்பார். சமையல் ஆர்வலர்களின் கண்களுக்கும் ,வயிற்றுக்கும் விருந்தாக அமைந்துள்ள இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிகழ்ச்சியை ரித்தி தொகுத்து வழங்குகிறார்.