India celebrates women’s cricket with a billion plays on Reels from the ICC Women’s T20 World Cup

Smriti Mandhana was one of the most popular players and the India vs. Pakistan match was one of the most popular matches in the ICC Women’s T20 World Cup last month.
150,000 Reels with over 140 million engagements related to the matches show the strong support young people in India have for women’s cricket.
Ahead of International Women’s Day, we are sharing insights about the way India celebrated the players  and teams at the ICC Women’s T20 World Cup in South Africa. Smriti Mandhana was one the most popular  players and the India vs. Pakistan match was one of the most popular matches on Instagram, with  over a billion plays on Instagram Reels throughout the tournament from India.
Instagram is a place where people can connect, build community and follow the things they love – and  Reels is a great way to do that. Cricket is a popular youth interest in India, so the robust conversation and  engagement on Instagram during the event was unsurprising. More than 150,000 Reels, with over 140  million engagements related to the matches have been created about the tournament from its start on  February 10th to its end on February 26th.

Sandhya Devanathan, Vice President, Facebook India (Meta),  said, “We’re excited that our platforms are the home where people can express themselves and support  each other. In context to International Women’s Day, that’s very important because we believe in  empowering women – whether you’re a consumer, a creator, a business owner, a sportsperson or a fan. We’re happy to see an entire nation backing women in a sport traditionally dominated by men, and that we’ve been able to play a small role in it.”

While a lot of the action was posted from the @icc, @t20worldcup and the cricketers’ Instagram accounts,  a squad of content creators were also sent to the host nation, South Africa, to cover the tournament. These  creators – Rida Tharana, Saloni Gaur and RJ Kisna – shared reels from a spectator’s lens and  collaborated with various teams to create content in a fun way for their audience. You can follow  #ReelsSquadIndia hashtag to see more.
Insights from ICC Women’s T20 World Cup:
Some of the most talked about players:
● Smriti Mandhana
● Harmanpreet Kaur
● Ellyse Perry
● Richa Ghosh
● Jemimah Rodrigues

Some of the most talked about teams:
● India
● Australia
● Pakistan
● England
● South Africa
Some of the most talked about matches:
● IndvsPak
● AusvsInd
● EngvsInd
● IndvsIre
● WivsInd
Some of the most popular hashtags: (apart from matches)
● #t20worldcup
● #Womencricket
● #womeninblue


ஒரு பில்லியன் பிளே எண்ணிக்கையைக் கடந்த ‘ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை
தொடர்பான ரீல்ஸுடன்’ இந்தியா மகளிர் கிரிக்கெட்டை கொண்டாடுகிறது

● விளையாட்டு வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தனா மிகவும் பிரபலமானவராக  உள்ளார், மற்றும் இந்தியா-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி கடந்த மாதம் நடைபெற்ற  உலக கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக
உள்ளது.
● போட்டிகள் தொடர்பாக மொத்தம் 150,000 ரீல்கள், 140 மில்லியன் என்கேஜ்மெண்ட்கள்  என மகளிர் கிரிக்கெட்டிற்கு இந்திய இளைஞர்களின் வலுவான ஆதரவு இருப்பதை இது  காட்டுகிறது.

சர்வதேச மகளிர் தினம் வரவிருப்பதையடுத்து, தென்னாப்பிரிக்காவில்  நடந்த ஐசிசி மகளிர் டி20 உலக் கோப்பையில் வீராங்கனைகள் மற்றும் அணிகளை இந்தியர்கள் கொண்டாடிய விதம் பற்றிய தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். ஸ்மிருதி மந்தனா மிகவும் பிரபலமான வீராங்கனைகளில் ஒருவராகவும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியானது இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்றாகவும் உள்ளது; போட்டிகள்  நடைபெற்ற காலம் முழுவதும் இந்தியாவிலிருந்து பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்  ஒரு பில்லியனுக்கும் அதிகமான முறை பிளே செய்யப்பட்டுள்ளன.

மக்களை இணைக்கவும், சமூகத்தை உருவாக்கவும் மற்றும் அவர்கள் விரும்பும்  விஷயங்களைப் பின்தொடரவும் ஒரு தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது – அதைச்  செய்வதற்கான சிறந்த வழி தான் ‘ரீல்ஸ்’. இந்தியாவில் இளைஞர்கள் ஆர்வம் காட்டும்  பிரபல விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது, எனவே உலகக்கோப்பையின் போது  இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்கமாக விவாதிக்கப்பட்ட மற்றும் ஈடுபாடு காட்டப்பட்ட  விஷயமாக கிரிக்கெட் இருந்ததில் ஆச்சரியமில்லை. போட்டித்தொடர் துவங்கிய பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 26 வரை உருவாக்கப்பட்ட உலகக்கோப்பை தொடர்பான  1,50,000-க்கும் அதிகமான ரீல்ஸ், 140 மில்லியனுக்கும் அதிகமான என்கேஜ்மெண்ட்களைப் பெற்றன.

இது பற்றி பேசிய ஃபேஸ்புக் இந்தியா (மெட்டா) நிறுவனத்தின், வைஸ் பிரசிடென்ட்,  சந்தியா தேவநாதன், அவர்கள், “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும்,  ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும் எங்களது தளங்கள் அவர்களின் விருப்பமான  இடமாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் ஒரு நுகர்வோராகவோ,  கிரியேட்டராகவோ, தொழில் முனைபவராகவோ, விளையாட்டு வீரராகவோ, அல்லது  ஒரு ரசிகராகவோ இருக்கலாம் – நமக்கு சர்வதேச மகளிர் தினம் என்பது மிக  முக்கியமான ஒரு தினமாகும், ஏனெனில் பெண்களுக்கு அதிகாரமளிப்பது மிகவும்  அவசியமென நாங்கள் நம்புகிறோம். ஒட்டுமொத்த நாடும், வழக்கமாக ஆண்கள்  ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு விளையாட்டில் பெண்கள் ஈடுபடுவதை பெரிதும்  ஆதரிப்பதைக் காண்பதிலும், அதில் எங்களது சிறிய பங்களிப்பும் இருப்பது குறித்தும்  நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்,” என்று தெரிவித்தார்.

@icc, @t20worldcup மற்றும் கிரிக்கெட் வீராங்கனைகள் தங்களது இன்ஸ்டாகிராம்  அக்கவுன்ட்கள் மூலம் பல்வேறு அட்டகாசமான கிரிக்கெட் காணொளிகள் பகிர்ந்த  சூழலில், பல்வேறு கன்டென்ட் கிரியேட்டர்கள் போட்டித்தொடரை பற்றிய செய்திகளை சேகரிக்க, போட்டி நடந்த தென் ஆப்பிரிக்கவிற்கு பயணித்தனர். ரிடா தாரனா, சலோனி  கௌர் மற்றும் RJ கிஸ்னா உள்ளிட்ட கிரியேட்டர்கள் பார்வையாளர்களின்  கண்ணோட்டத்தில் ரீல்ஸ்களைப் பகிர்ந்தனர், மற்றும் பல்வேறு அணிகளுடன்  ஒருங்கிணைந்து மகிழ்ச்சியான விதத்தில் காணொளிகளை தங்கள் நேயர்களுக்காக  உருவாக்கினார்கள். இது தொடர்பான காணொளிகளை அதிகம் பார்க்க நீங்கள்  #ReelsSquadIndia என்கிற ஹேஷ்டேகை பின்தொடரலாம்.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை குறித்த தகவல்கள்:
அதிகம் பேசப்பட்ட சில விளையாட்டு வீராங்கனைகள்:

● ஸ்மிருதி மந்தனா
● ஹர்மன்ப்ரீத் கவுர்
● எல்லிஸ் பெர்ரி
● ரிச்சா கோஷ்
● ஜெமிமா ரோட்ரிக்ஸ்
அதிகம் பேசப்பட்ட சில அணிகள்:
● இந்தியா
● ஆஸ்திரேலியா
● பாகிஸ்தான்
● இங்கிலாந்து
● தென் ஆப்பிரிக்கா
அதிகம் பேசப்பட்ட சில போட்டிகள்:
● இந்தியா vs பாகிஸ்தான் (IndvsPak)
● ஆஸ்திரேலியா vs இந்தியா (AusvsInd)
● இங்கிலாந்து vs இந்தியா (EngvsInd )
● இந்தியா vs அயர்லாந்து (IndvsIre)
● மேற்கிந்தியத் தீவுகள் vs இந்தியா (WivsInd)
மிகவும் பிரபலமான ஹேஷ்டேகுகள்: (போட்டிகள் தவிர)
● #t20worldcup
● #Womencricket
● #womeninblue