‘கண்ணே கலைமானே’ படத்திற்கு சர்வதேச படவிழாவில் கெளரவ விருது
மண் சார்ந்த யதார்த்தக் கதைகளை படைப்பதில் திறமையானவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த ‘கண்ணே கலைமானே’ படம் தொடர்ந்து பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது.
மேலும், சிறந்த திரைப்படத்திற்காக அமெரிக்க சோகால் விருதையும் வென்றது. இதனையடுத்து, தற்போது ஜெய்பூரில் 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் (JIFF) இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும், ஃபீச்சர் ஃபிக்ஷன் பிரிவில் இந்தப் படத்திற்கு கெளரவ விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
![](https://chennaivision.com/wp-content/uploads/2024/02/IMG_5578.jpg)
![](https://chennaivision.com/wp-content/uploads/2024/02/kane.jpg)