குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில், “கேம் சேஞ்சர்” திரைப்படம்

குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில், “கேம் சேஞ்சர்” படத்திலிருந்து, இந்த வருடத்தின் மிகச்சிறந்த மெலடி “லைரானா” பாடல் வெளியாகியுள்ளது!

ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியின்  அட்டகாசமான கெமிஸ்ட்ரியில் “லைரானா” ரொமாண்டிக் பாடல் மனதைக் கவர்ந்திழுக்கிறது ! தமனின் இசையில்  இன்ஸ்டன்ட் சார்ட்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது !!

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’  2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியின் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தெலுங்கில் ‘நானா ஹைரானா’, ஹிந்தியில் ‘ஜானா ஹைரான் சா’, தமிழில் ‘லைரானா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ரொமாண்டிக் பாடல் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘இந்த ஆண்டின் மிகச்சிறந்த மெலடி பாடலாக, ரசிகர்கள் இப்பாடலைக் கொண்டாடி வருகின்றனர். தமிழில் இப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார், உண்மையில், இந்த சிங்கிளின் BTS கூட ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.  ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியின் கெமிஸ்ட்ரி மற்றும் ரொமான்ஸை இப்பாடல் அழகாக  வெளிப்படுத்துகிறது. இப்பாடல் வெளியான வேகத்தில் பெரும் வைரலாக பரவி, சார்ட்பஸ்டராக மாறியுள்ளது.

நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட ஒரு  அட்டகாசமான ஃப்யூஷன் மெலடி பாடல் “லைரானா” இந்த பாடல்  ‘இன்ஃப்ராரெட் கேமரா’வில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் பாடல் ஆகும்.  பல்வேறு வண்ணங்களை வெளிப்படுத்தும் திறனைக் கொண்ட கேமராவில் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய மற்றும் கர்நாடக சங்கீத கலவையில்  இப்பாடல் ரசிகர்களுக்கு ஒரு இனிமையான உணர்வைத் தருகிறது. ஷங்கர், ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி கூட்டணி  நியூசிலாந்தில் ஐந்து நாட்களுக்கு மேல் இப்பாடலைப் படமாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் தமன் தனித்துவமான இசையில், நிறைய மோனோடோன்களுடன் தனித்துவமான ஒலியை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கான காஸ்ட்யூம்களை மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார்.

சரிகம நிறுவனம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ மியூசிக் பார்ட்னராக செயல்படுகின்றனர். இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் கார்த்திக் பாடியுள்ளனர், போஸ்கோ மார்டிஸ் நடனம் அமைத்துள்ளார், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய  மொழிகளில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, தயாரிப்பாளர்கள் பாடலின் போஸ்டர் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளித்த நிலையில், இப்போது முழுப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் இரண்டு பாடல்களான ‘ஜருகண்டி’ மற்றும் ‘ரா மச்சா மச்சா’ பார்வையாளர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது மூன்றாவது பாடல் மக்களிடையே  இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

முன்னதாக, தயாரிப்பாளர்கள் நெட்டிசன்களை ‘கேம் சேஞ்சர்’ டீசர் மூலம் , இதுவரை கண்டிராத அவதாரத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரணைக்  காண்பித்து அசத்தினர்.  ராம் சரண் ஒரு சக்திவாய்ந்த அதிகாரியாகவும் (ஐஏஎஸ் அதிகாரி) மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்க விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி  ஆக்‌ஷன் காட்சிகள், அரசியல் கருத்துக்கள், அனைவரையும் ஈர்க்கும் கதை மற்றும் நட்சத்திர நடிகர்களின் நடிப்பு என இப்படம் ஒரு அற்புதமான அனுபவமாக உருவாகியுள்ளது.

எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, எஸ்.தமனின் அட்டகாசமான இசை, குளோபல் ஸ்டார் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, நவீன் சந்திரா, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் குழு ‘கேம் சேஞ்சர்’ அட்டகாசமான ரோலர்கோஸ்டர் அனுபவமாக உருவாகியுள்ளது. ஸ்ரீமதி. அனிதா வழங்கும் இப்படத்தை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தில் ராஜு புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்துள்ளனர். இரண்டு முன்னணி தயாரிப்பாளர்களான, திரு.தில்ராஜு & திரு.ஆதித்யராம் இந்த மெகா திரைப்படம் மூலம் கைகோர்க்கின்றனர். கேம் சேஞ்சர் தமிழ் பதிப்பை எஸ்.வி.சி. ஆதித்யராம் மூவிஸ் தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, இப்படம் 2025 ஜனவரி 10 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

ஏஏ பிலிம்ஸின் அனில் ததானி இந்தி வெளியீட்டைக் கையாளுகிறார். கேம் சேஞ்சரின் பிரமாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு டிசம்பர் 21 அன்று டல்லாஸ் யு.எஸ்.ஏ.வில் நடக்கவுள்ளது. கரிஸ்மா ட்ரீம்ஸ் ராஜேஷ் கல்லேபள்ளியால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.