Generic Preventive Measures
தமிழக அரசுக்கு நன்றியும்..அணைத்து உடற்பயிற்சி கூடங்களும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களுடன் ஜிம்மை நடத்திட *தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கம்* அறிக்கை.
தமிழக அரசு தற்போது கொண்டு வந்து உள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளில் தமிழகத்தில் உள்ள அணைத்து உடற்பயிற்சி கூடங்களும் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளின் படி தொடர்ந்து செயல்பட அனுமதித்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இது போன்ற காலங்களில் எங்கள் ஜிம் துறையின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள தமிழக அரசுக்கும், தலைமை செயலாளர் அவர்களுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் மற்றும் தமிழக அரசு துறை சார்ந்த அணைத்து நிர்வாகிகளுக்கும் எங்கள் *TNGOA அமைப்பின்* நெஞ்சம் கலந்த நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறோம்.
தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி கடந்த வருடம் பல மாதங்களாக அணைத்து உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டதன் விளைவாக அந்த பேரிடரில் இருந்து இன்னும் எங்கள் தொழில் துறை முழுமையாக விடுபட முடியவில்லை என்பதையும் தற்போது மட்டும் அல்ல எந்த சூழலிலும் அரசு கொண்டு வரும் அணைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றி உடற்பயிற்சி கூடங்களை நடத்திடவும் மான்புமிகு அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் *தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கம்* உறுதி கொண்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள அணைத்து உடற்பயிற்சி கூடங்களும் மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள கொரோனா காலத்தில் பின்பற்றபட வேண்டிய விதிமுறைகளை பின்பற்றி தான் தற்போது வரை அணைத்து உடற்பயிற்சி கூடங்களும் செயல்படுகிறது அவை மேலும் கூடுதல் கவணத்துடன் செயல்படுத்த *Tamilnadu Gym Owners Association* சார்பாக அணைவருக்கும் அறிவுறுத்தப்பட்டு அதன் அடிப்படையில் செயல்படுத்தி வழி நடத்தப்படும்.
தொடந்து மத்திய மாநில அரசுகளின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை வழிகாட்டுதழின் படி செயல்படும் எங்கள் அமைப்பு *Tamilnadu Gym Owners Association* என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக பணிவுடன் மத்திய மாநில அரசுகளுக்கு தெறியப்படுத்திக்கொள்கிறோம்.
நன்றி
*v ராஜா,* தலைவர் *I பிரன்னா குமார்* துணை தலைவர் *A பஹது ஜஹாங்கீர்* செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்
*G A, இர்பான் செரீஃப்* *G, ராஜ்பாபு* *M, விஜயராகவன்* *T, நிஷா* *R, குமார்* * S.முகம்மது ரபீக்* *D, லோகேஷ்*