Future Skills awareness program held at Velammal

Velammal Main campus  organised the Future Skills Awareness  Program  by Mr. Karunakaran, Future Skills Trainer on 11th August, 2021 in three – day skill set program scheduled for one hour  in the Google Meet platform for the students of Std 7 to 9.

The resource person addressed on different types of sensors and it’s applications in various fields. He further spoke about collaborative  robots displaying the various models used in the service sector. The program was perfect as it boosted  the students  awareness on how future skills would help them standout in their career and also help them discover their inner talents. 

The empowering program received an overwhelming response as it helped the students to enhance practical expertise in specific areas.

For more details,  contact: 8056063519.

மாணவர் எதிர்காலத் திறன் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி  வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது.

முகப்பேர் வேலம்மாள் மையப்பள்ளி, மாணவர்களின் எதிர்காலத் திறன்களை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
திறன்வளர் பயிற்சி நிபுணர் திரு. கருணாகரன் அவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு ஏழாம்  வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்றுப் பயன்பெறும் வகையில் மூன்று நாள் பயிற்சி வகுப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆகஸ்டு 11,2021 அன்று தொடங்கிய இந்நிகழ்வு ஒரு  மணிநேர கால அளவில் கூகுள் இணையவழி சந்திப்பின் வழியாக நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் திறன்வளர் பயிற்சியாளர் திரு. கருணாகரன் அவர்கள் பல்வேறு  வகையான தொழில்துறை சென்சார்கள் பற்றி  உரையாற்றினார் மற்றும்  பல்வேறு துறைகளில் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கினார். மேலும் சேவைத் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு கூட்டு ரோபோக்களின் மாதிரிகள் பற்றியும் அவர்  பேசினார். இந்த நிகழ்வானது  மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் இது மாணவர்களின் எதிர்காலத் திறன்கள் அவர்களின் வாழ்க்கையில்  எவ்வாறு தனித்து நிற்க உதவும் என்பதையும், அவர்களின் உள் திறமைகளைக் கண்டறியவும் உதவுகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் நடைமுறை நிபுணத்துவத்தை மேம்படுத்த மாணவர்களுக்கு உதவியதால் இந்த வளர்ச்சித் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் விவரங்களுக்கு, 8056063519 ஐ தொடர்பு கொள்ளவும்.

*vrcs