Eurogrip Tyres opens first branded retail store in Chennai The utility rich, one stop solution store will offer a wide range of services on aspects of tyre care and allied services

Eurogrip Tyres, India’s leading 2 & 3-wheeler tyre brand inaugurated its first branded retail store in Velachery, Chennai. The one-stop solution store is specially designed to cater to all aspects of tyre care, allied services and 2-wheeler riders’ requirements.

The retail store will have the entire range of tyre patterns and tubes from Eurogrip Tyres. Eurogrip has partnered with TVS Racing for riding accessories and merchandise such as helmets, knee protectors, jackets, and gloves that are available for purchase to customer. The store will also retail 2-wheeler lubricants from brand Veedol.

Speaking at the opening of the new store, P. Madhavan, EVP, Sales and Marketing, TVS Srichakra Ltd said, “We are extremely delighted with the opening of our first Eurogrip Tyres exclusive store in Chennai. As a bike tyre specialist brand, we see our store as a way to showcase our wide range of tyres for 2-wheelers. We have also partnered with brands from allied categories to meet the millennial Indian rider’s requirements beyond tyres and tyre services. This is the first of the many stores that we plan to open across India. This store will further strengthen our extensive retail network.”

The facility is equipped with services such as tyre fitment, tyre care & puncture repair services, air pressure check and filling, in addition to EV charging, lubricant / engine oil change and warranty related services.


சென்னை மாநகரில் யூரோகிரிப் டயர்ஸ்-ன் முதல் பிராண்டடு ரீடெய்ல் ஸ்டோர் ஆரம்பம்.

டயர் பராமரிப்பு மற்றும் தொடர்புடைய சேவைகளின் அம்சங்கள் மீது விரிவான சேவைகளை இந்த ஒற்றை நிறுத்த தீர்வுக்கான ஸ்டோர் வழங்கும்.

இந்தியாவின் முன்னணி 2 & 3 சக்கர வாகனங்களுக்கான டயர் பிராண்டு என புகழ் பெற்றிருக்கும் யூரோகிரிப் டயர்ஸ், சென்னை மாநகரின் வேளச்சேரி பகுதியில் அதன் முதல் பிராண்டடு ரீடெய்ல் ஸ்டோரை தொடங்கியிருக்கிறது. டயர் பராமரிப்பு, தொடர்புடைய சேவைகளின் அனைத்து அம்சங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென இந்த ஒற்றை–நிறுத்த தீர்வு ஸ்டோர் தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

யூரோகிரிப் டயர்ஸ் தயாரித்து வழங்கும் டயர்கள் மற்றும் டியூப்களின் ஒட்டுமொத்த அணிவரிசையையும் இந்த ரீடெய்ல் ஸ்டோர் கொண்டிருக்கும். தலைகவசங்கள், முழங்கால் பாதுகாப்பு சாதனங்கள், ஜாக்கெட்டுகள் மற்றும் கையுறை போன்ற இருசக்கர வாகன துணைப்பொருட்கள் மற்றும் வணிக விற்பனை பொருட்களும் இந்த ரீடெய்ல் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்காக கிடைக்கும். இப்பொருட்களுக்காக டிவிஎஸ் ரேஸிங்-உடன் கூட்டுவகிப்பு உடன்பாட்டை யூரோகிரிப் செய்திருக்கிறது. வீடால் பிராண்டின் இருசக்கர வாகனங்களுக்கான லூப்ரிகண்ட்களையும் இந்த ஸ்டோர் விற்பனை செய்யும்.

டிவிஎஸ் ஶ்ரீசக்ரா லிமிடெட்-ன் ஈவிபி, சேல்ஸ் அண்டு மார்கெட்டிங் திரு. பி. மாதவன், இப்புதிய ஸ்டோர் திறப்பு விழாவின்போது பேசுகையில், “சென்னை மாநகரில் எமது முதல் யூரோகிரிப் டயர்ஸ்-ன் பிரத்யேக ஸ்டோரை தொடங்குவது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான டயர்கள் தயாரிப்பில் சிறப்பு நிபுணத்துவம் கொண்ட பிராண்டாக திகழும் நாங்கள், இருசக்கர வாகனங்களுக்கான எமது டயர்களின் விரிவான அணிவரிசையை நேர்த்தியாக காட்சிப்படுத்துவதற்கான ஒரு நல்ல அமைவிடமாக எமது ஸ்டோரை நாங்கள் பார்க்கிறோம். டயர்கள் மற்றும் டயர் தொடர்பான சேவைகள் என்பதையும் கடந்து இளம் தலைமுறையை சேர்ந்த இந்திய வாகன ஓட்டிகளின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காக தொடர்புடைய பிற வகையினங்களைச் சேர்ந்த பிரபல பிராண்டுகளுடன் கூட்டுவகிப்பையும் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கிலும் தொடங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிற பல ஸ்டோர்களில் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த ஸ்டோர் முதலாவதாகும். எமது பரந்து விரிந்த ரீடெய்ல் வலையமைப்பை, இந்த ரீடெய்ல் ஸ்டோர் மேலும் வலுப்படுத்தும்,” என்று குறிப்பிட்டார்.

டயர் பொருத்துதல், தயார் பராமரிப்பு மற்றும் பஞ்சர் பழுதுநீக்கல் சேவைகள் காற்று அழுத்த பரிசோதனை மற்றும் நிரப்பல் ஆகிய சேவைகளை வழங்குவதற்கான அனைத்து வசதிகளையும், பணியாளர்களையும் இது கொண்டிருக்கிறது. இதற்கும் கூடுதலாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங், லூப்ரிகண்ட் / இன்ஜின் ஆயில் மாற்றுவது மற்றும் வாரண்டி தொடர்புடைய சேவைகளையும் இம்மையம் வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தியளிக்கும் வகையில் வழங்கும்.

REK
???