சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து.. தொழில் அதிபராகி இன்று “ரெஜினா படத்தை தயாரித்து இசை அமைத்துள்ளார், சதிஷ் நாயர் !!
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’.
நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை மலையாள இயக்குநர் டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.
இந்தப்படம் வரும் ஜூன்-23ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகம் தாண்டி, ஆந்திரா, கேரளாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் கேரளாவில் கொச்சியில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர், இயக்குனர் டொமின் டி’சில்வா, நாயகி சுனைனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில், மலையாள திரையுலகை சேர்ந்த கதாசிரியரும் இயக்குனரும் 90களில் டாக்குமென்டரி படங்களை இயக்கி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவரும் தயாரிப்பாளர் சதீஷ் நாயரின் அண்ணன் பிரதீப் நாயர் கலந்து கொண்டு வரவேற்புரை அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘சதீஷ் நாயரின் தந்தை ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 80களில் இவர் தயாரித்த மீனு மிக்ஸி (meenu mix ) அந்த காலகட்டத்தில் கேரளாவில் ஒவ்வொரு வீட்டின் அடுக்களையிலும் தவறாமல் இடம்பெற்று இருந்தது. அப்படிப்பட்ட குடும்பம் ஒரு காலத்தில் வியாபாரத்தில் சரிவை சந்தித்து முடங்கியது. பின்னர் அவரது மகன் சதீஷ் நாயர் அந்த குடும்பத்தில் இருந்து தனது சொந்த முயற்சியால் தலையெடுத்து ஸ்டார் கோட்டல் கிச்சன் மெஷின் வேலைகளுக்கான உபகர்ணங்களை கொடுப்பது என்ற புதிய வியாபாரத்தை துவங்கி இன்று உலகெங்கிலும் உள்ள பல ஹோட்டல்களுக்கு வழங்கி மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்துள்ளார்
இயல்பாகவே இசையில் ஆர்வம் கொண்ட அவர் தமிழில் மியூசிக் ஆல்பம் உருவாக்கினார். பின்னர் இப்போது பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். அவர் நினைத்திருந்தால் மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரித்திருக்கலாம். ஆனாலும் அவர் விருப்பப்பட்ட ஒரு ஸ்டைலில் “ரெஜினா” என்ற படம் எடுத்து இந்த வாரம் ரிலீஸ் செய்கிறார். அவரை நான் வாழ்த்துகிறேன்: என்று கூறினார்.
JohnsonPro