இயக்குனர்கள் சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற “பூம்பூம் மாட்டுக்காரன்”
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற “பூம்பூம் மாட்டுக்காரன்” குறும்படம்…
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த Ifa இணைந்து நடத்திய 2023 ஆம் ஆண்டிற்கான இன்டர்நேஷனல் குறும்பட போட்டி ஜூலை மாதம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் 12 குறும்படங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன.
மறைந்த இயக்குனர் ராசு மதுரவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திம்மராயன் சுவாமி இயக்கிய பூம்பூம் மாட்டுக்காரன் இந்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசான ரூபாய் 1 லட்சத்தை தட்டி
சென்றது…
அந்தப் பரிசுக்கான காசோலையையும் பாராற்று சான்றிதழையும் Ifa தயாரிப்பாளர் திரு சரவணன பிரசாத் மற்றும் திரு ஆர் கே செல்வமணி அவர்களும் இணைந்து இயக்குனர் திம்மராயனிடம் வழங்கினார்கள்…
ஒளிப்பதிவு
சபாகுமார்
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் திரு.ஸ்ரீகாந்த் தேவா
தேசிய விருது பெற்ற எடிட்டர் திரு சபாபு ஜோசப்
இந்த படத்தில் இடம்பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…
நடிகர்கள்
ராஜராகவன்
சுபாஷ் சந்திர போஸ்
ஸ்ரீதேவி
மற்றும் B.M முருகேசன் ஆகியோரது நடிப்பில் உருவான இந்த குறும்படம் ஜூலை 31ஆம் தேதி இயக்குனர்கள் சங்கத்தில்
ஆர்கே.செல்வமணி
பேரரசு
எழில்
சரண்
சரவண சுப்பையா
மற்றும் உறுப்பினர்கள் பலர் முன்னிலையில் திரையிடப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது…
ஒவ்வொருவருடைய வெற்றிக்கு பின்னால் எவ்வளவு பெரிய வலி இருக்கிறது என்பதை குறும்படம் சுட்டி காட்டுகிறது…
வலி வெறும் வார்த்தை அல்ல உடல் நடுங்க மனம் மனம் வழு விழுந்து விழும் தருணமே வலி ஒரு திரைப்பட உதவி இயக்குனரின் வாழ்க்கையை வைத்து இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தக் குறும்படம் இன்னும் பல விருது விழாக்களை அலங்கரிக்கப் போகிறது என்று பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இயக்குனர் திம்மராயன் விரைவில் வெள்ளித்திரையில் ஜொலிக்க அனைவரது வாழ்த்துக்கள்…