Aranmanai3 censored with U/A certificate.. All geared up for release next month!
தணிக்கையில் U/A சான்றிதழ் பெற்ற அரண்மனை-3 திரைப்படம் !
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் தணிக்கை நிறைவாக முடிந்தது. தணிக்கை குழு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது .
அரண்மனை 3 திரைப்படம் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா இசையமைக்கிறார் .குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படமான இப்படத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்கம் : சுந்தர் .சி தயாரிப்பு நிறுவனம் : அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர் ஒளிப்பதிவு : UK செந்தில்குமார் இசை : C சத்யா படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர் கலை இயக்கம் : குருராஜ் சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்,தளபதி தினேஷ் ,பிரதீப் தினேஷ் நடனம்:பிருந்தா,தினேஷ் மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்.