Actor Arya’s The Show People in association with Think Studios Presents Filmmaker Shakti Soundar Rajan director Arya starrer titled “CAPTAIN”
Following the grand success of Teddy, the actor Arya-filmmaker Shakti Soundar Rajan duo has collaborated yet again for a new-fangled movie. As the K-Town knows, the shoot commenced recently in Chennai and is proceeding at a brisk pace. Now the makers have unveiled the film’s title ‘CAPTAIN’.
Sharing the news, director Shakti Soundar Rajan says, “The term ‘CAPTAIN’ is significant and relevant in many aspects of reality. From a sports team to any societal avenue, the term holds substantial prominence. It’s not a position but a character that plays a pivotal tool in accomplishing a mission by leading a team. Significantly, this factor will remain germane to the character that Arya plays in the movie.” The filmmaker, who has delivered consistent hits down the line adds, “Titles have always played a strong part attributing over pulling crowds towards a film. Especially, during this flourishing realm of OTT platforms, which have permanently bridged the gap between countries, boundaries, and linguistic factors, titles are playing an important role in appealing to the interest of universal audiences. More than all, the movie has 100% element that will justify the reason behind having ‘Captain’ as the title.”
Speaking about actor Arya’s performance in the film, Shakti Soundar Rajan adds, “What can I say about an actor, whose dedication and passion for every role and movie is an open book. A Captain is someone, who believes in the process with strong faith, sheer allegiance to the role, which obviously yields the finest results. It has been illustrious with every film he does and Captain will expand his fan base across all regions.”
The first leg shooting of Captain will be completed soon, and the crew will be leaving for North Indian territories by mid-December for the second schedule, where a major chunk of this movie will be filmed. The others in the star cast include Simran, Aishwarya Lakshmi, Thyagarajan, Kavya Shetty, Harish Uthaman, Gokul, Bharath Raj, and a few more prominent actors.
Captain has a musical score by D Imman, cinematography by S. Yuva, lyrics by Karky, editing by Pradeep E Raghav. The others in the technical crew include R. Sakti Saravanan is the stunt choreographer, S.S. Moorthy is the art director, and V. Arun Raj is the CG Head.
The film is written and directed by Shakti Soundar Rajan and is produced by Arya’s The Show People in collaboration with Think Studios.
நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், படைப்பாளி சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது !
இது குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில்..
“கேப்டன்” எனும் தலைப்பு நேர்த்தியானது, நிஜத்தில் பல விசயங்களில் மிகப்பெரும் மதிப்பை கொண்டிருக்கும் தலைப்பு இது. ஒரு விளையாட்டு குழுவில் ஆரம்பித்து, சமூகத்தின் எந்த ஒரு குழுவிலும், கேப்டன் எனும் பொறுப்பு மிக முக்கியமானது. அது வெறும் தலைமை என்கிற இடம் கிடையாது. மொத்த குழுவையும் வழிநடத்தி செல்லும் கடமை கொண்ட, மிகமுக்கியமான பொறுப்பு. இது அப்படியே படத்தில் ஆர்யா ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மேலும் கூறுகையில், தலைப்பு ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம், அதுதான் ரசிகர்களை படம் நோக்கி ஈர்க்கும் மிக முக்கியமான கருவி, அதிலும் OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் திரைப்படங்கள் மொழி, நாடு, இன எல்லைகளை கடந்து உலகின் பல முனைகளுக்கும் எளிதாக சென்று சேர்கிறது. ஆனால் அங்குள்ள ரசிகர்களை படத்தை நோக்கி இழுக்கும் முதல் அம்சமாக இருப்பது, படத்தின் தலைப்பு தான். எல்லாவற்றையும் தாண்டி இந்த கதையும், களமும் இந்த தலைப்பு 100 சதம் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும் என்றார்.
நடிகர் ஆர்யா பற்றி இயக்குனர் கூறியதாவது..,
தான் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்திலும், தன் உயிரைக்கொடுத்து, உழைக்கும் நடிகர் ஆர்யா பற்றி நான் என்ன கூறுவது, அவர் நடிப்பு திறமை குறித்து ஊரே அறியும். “கேப்டன்” படத்தை பொறுத்தவரை இப்பாத்திரத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து முழு அர்ப்பணிப்பையும் தந்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். ஆனால் அதனை ஒவ்வொரு படத்திலுமே மாறமால் செய்து வருகிறார் ஆர்யா. இந்த திரைப்படம் இப்போது இருக்கும் ரசிகர் வட்டத்தை தாண்டி, பல மொழிகளிலும் அவரது ரசிகர் வட்டத்தை பெருக்கும் என்றார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிபிற்காக, வட இந்திய பகுதிகளுக்கு டிசம்பர் மாத மத்தியில் செல்லவுள்ளது. அங்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
“கேப்டன்” படத்திற்கு, D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.
இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.