சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோதிய ஆட்டத்தை ஜியோசினிமாவில் 2.4 கோடி பேர் கண்டுகளிப்பு

டாடா ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்
மோதிய போட்டியை ஜியோசினிமாவில் ஒரே நேரத்தில் அதிக பார்வையாளர்கள்
கண்டுகளித்து சாதனை படைத்திருந்தனர். இந்த ஆட்டம் முடிவடைந்த 5 நாட்களில் 2வது முறையாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி ஆட்டத்தை  ஜியோ சினிமாவில் 2.4 கோடி பேர் பார்வையிட்டு சாதனை படைத்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 24வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் சொந்த மைதானத்தில் மற்றொரு ரன்வேட்டை எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இந்த எதிர்பார்ப்பை முதலில் பேட் செய்த 4 முறை சாம்பியனான சிஎஸ்கே பூர்த்தி செய்ய தவறவில்லை. டேவன் கான்வே, அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்த சிஎஸ்கே 226 ரன்கள் குவித்தது. இந்த வீரர்களின் ஸ்டிரைக் ரேட் 180-க்கும் அதிகமாக இருந்தது.

பதிலுக்கு மட்டையை சுழற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடக்கத்தில் 2
விக்கெட்களை இழந்த போதிலும் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும்  பிக் ஷோ  மேக்ஸ்வெல்
ஆகியோர் கூட்டாக 136 ரன்களை வேட்டையாடி பெங்களூரு அணியை ஆட்டத்துக்குள்
கொண்டு வந்தனர். கடைசி ஓவரில் பெங்களூருவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவையாக
இருந்தது. அப்போது இந்த ஆட்டத்தை ஜியோசினிமாவில் கண்டுகளித்தவர்களின்
எண்ணிக்கை 2.4 கோடியாக பதிவாகி இருந்தது.

இந்த ஆட்டத்தில் மிஸ்டர் கூல் எம்எஸ் தோனியின் வழிகாட்டுதலின் கீழ் சிஎஸ்கே 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் ஓட்டுமொத்தமாக 444 ரன்கள் குவிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே இரண்டு முக்கியமான புள்ளிகளைப் பெற்றதுடன் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை பின்னுக்கு தள்ள முடிந்தது.

ஜியோசினிமாவில் ஏப்ரல் 12 -ம் தேதி ஒரே நேரத்தில் அதிக பார்வையாளர்களாக இருந்த
முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் 2.2 கோடி பார்வையாளர்களை தொட்டிருந்தது. இதற்கு காரணம் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தை தோனி தனது பழைய நாட்களின் பரபரப்பான முடிவுகளை போன்று கொடுத்ததுதான்.

டாடா ஐபிஎல் 2023 தொடரை ஜியோசினிமாவில் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் முன்னுரிமை வழங்குவதற்கு இந்த பதிவுகளே சான்றாகும்.

கூடுதலாக போட்டியின் போது ரசிகர்களை இருக்கையின் விளம்பிற்கு கொண்டு வரும்
வகையில், ஜியோசினிமாவின் ரிப்பீட் ரெக்கார்ட்-ரம்பிள், அனைத்து நெட்வொர்க்குகளிலும் இலவச ஸ்ட்ரீமிங், 4K ஸ்ட்ரீமிங், 12-மொழி வர்ணனை போன்ற  ரசிகர்களை மையமாகக் கொண்ட பல சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும்  ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரசிகர்களுக்கு இலவசமாக ‘ஜீதோ தன் தனா தன்’ என்ற  போட்டி நடத்தப்பட்டு அற்புதமான பரிசுகளுடன் ஒவ்வொரு ஆட்டத்துக்கம் ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது