ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்ற வயாகாம்18.. கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராகிறது

இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் போட்டிகளை 2023 ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வயாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், வயாகாம்18 நிறுவனம், ஒவ்வொரு சீசனிலும் 18 போட்டிகளுக்கான ஸ்பெஷல் பேக்கேஜ்களை இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையையும் பெற்றுள்ளது.

உலகளவில், வயாகாம்18 முக்கிய கிரிக்கெட் நாடுகள் உட்பட ஐந்து சர்வதேச பிரதேசங்களில் மூன்றில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை வென்றுள்ளது.

முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் தளங்களைவிட ஏலத்தில் அதிக விலையைக் கூறி வயாகாம் நிறுவனம் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு தளங்களில் தன்னை முன்னணி டிஜிட்டல் ஊடகமாக நிலைநிறுத்தியுள்ளது. வயாகாமின் பரந்துபட்ட கிடைத்த பெயர், முக்கியமான கூட்டு ஒப்பந்தங்கள் மற்றும், பிரபலமான நிகழ்சிகளை அதிகப்படுத்துவது போன்றவற்றின் காரணமாக வயாகாம்18 தொலைக்காட்சிகளில் இந்தியாவின் தலைமையை நோக்கி வேகமாக முன்னேறுகிறது.

அதேபோல, உலகம் முழுவதும் பரவி வாழும் இந்திய வம்சாவளியினிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையின் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவை இலவச சேனல்களை மட்டும் கொண்டுள்ளதால் முக்கியமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் இருக்கும் 60 மில்லியன் மக்கள் உள்பட இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு செல்லமுடியும்.

பாரம்பரியான தொலைக்காட்சி ஒளிபரப்பை வலுப்படுத்தும் அதேநேரத்தில் எதிர்காலத்துக்கான டிஜிட்டல் தளத்தை கட்டமைப்பதை வயாகாம்18 செய்துகாட்டியுள்ளது. கோடிக்கான இந்தியர்களுக்கும் சர்வதேச பயனாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தை டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவாக்கித் தரும் கலையைக் வயாகாம் கொண்டுள்ளது.

உலகத் தரம் வாயந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதுபோல கண்டறியும் அல்காரிதம் மற்றும் பிக் டேட்டா ஆய்வின் மூலம் ஒவ்வொரு பயனாளர்களுக்கும் அவர்கள் விரும்பத்துக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை இந்த டிஜிட்டல் தளம் வழங்கும்.

கால்பந்தாட்ட விளையாட்டுகளான ஃபிஃபா உலகக் கோப்பை, லா லிகா, சீரிஸ் ஏ மற்றும் லீக் 1, பேட்மின்டன், டென்னிஸ், கூடைப் பந்து போன்ற விளையாட்டுகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றதற்கு பிறகு முதன்முறையாக வயாகாம்18 கிரிக்கெட்டிற்குள் நுழைகிறது. ஐபிஎல் உரிமையைப் பெற்றதன் மூலம் வயாகாம் 18 மற்றும் அதன் தளங்கள் இந்தியாவின் விளையாட்டுக்கான மிகப்பெரிய தளமாக உருவாகியுள்ளது.

மிகப்பெரிய, இளையோர்கள் கொண்ட, மிகுந்த ஈடுபாடுள்ள பார்வையாளர்களைச் சென்றடைய விளம்பரதாரர்களுக்கு இதுஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

இதுகுறித்து தெரிவித்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிடா அம்பானி, ‘விளையாட்டு நம்மை மகிழ்விக்கும், உற்சாகப்படுத்தும், நம்மை ஒன்றிணைக்கும். கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல் சிறந்த விளையாட்டின் அடையாளம். சிறந்த இந்தியாவின் அடையாளம். அதனால், இந்த மிகச்சிறந்த விளையாட்டு மற்றும் தலைசிறந்த தொடருடன் ஆழமாக இணைந்து செயல்படுவதை பெருமையாக உணர்கிறோம். கிரிக்கெட் ரசிர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஐ.பி.எல்லின் மிகச் சிறந்த அனுபவத்தைக் கொண்டு செல்வதுதான் எங்களுடைய இலக்கு. நம்முடைய நாட்டின் எல்லாப் பகுதிக்கும். உலகின் எல்லாப் பகுதிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Jothi