Tamil Movie Trailer Video Songs Videos

*இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் இடம்பெற்ற ‘லல்லாரியோ..’ பாடலின் வீடியோ, அமேசன் பிரைமில் வெளியீடு.*

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. இந்தப்படத்திற்காக இசையமைப்பாளர் கிரிஷ்  இசையில் பாடலாசிரியர் வே. மதன்குமார் எழுதிய ‘லல்லாரியோ லல்லாரியோ…’ எனத் தொடங்கும் பாடலை பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்த பாடலின் வீடியோவை அமேசான் பிரைம் வீடியோ இன்று வெளியிட்டிருக்கிறது. இந்த பாடலில் படத்தில் இடம்பெற்ற இரண்டு முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையேயான சகோதரத்துவ உறவு அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான காணொளிகளில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் செப்டம்பர் 24ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்தப் பாடல், டிஜிட்டல் தள பார்வையாளர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறது.