Tamil Movie Poster

“S Crown Pictures” முதல் படைப்பு – “சிதம்பரம் ரயில்வேகேட்” First Look போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு.!

எஸ்.எம். இப்ராஹிம் அவர்களின் “S Crown Pictures” தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பை மக்களுக்கு அளிக்கவுள்ளது. பிரபல நடிகர் மயில் சாமி அவர்களின் மகன் அன்பு மயில் சாமி, தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக களமிறங்கி அசத்தியுள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அவர்களுடன் இணைந்து தனது அடுத்த பரிமாணத்தை அளிக்கவுள்ளார் அன்பு. 
மாஸ்டர் மகேந்திரன் சிறு வயது முதலே தனது முத்தான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரும் அன்பு மயில்சாமி அவர்களும் இணைய உள்ள படம் தான் “சிதம்பரம் ரயில்வேகேட்”. திரு. எஸ்.எம். இப்ராஹிம் அவர்களின் “S Crown Pictures” தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக இது உருவாகி உள்ளது. 
இசைஞானியின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணியை சுரேஷ் ஆர்ஸ் மேற்கொள்ள திரு. R. வேல் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் அசோக்ராஜா நடன இயக்குநராக களமிறங்குகிறார். திரில்லர் கலந்த கமர்சியல் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் நீரஜா மற்றும் காயத்திரி நாயகிகளாக நடிக்க, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் வில்லனாக களமிறங்கி உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. 
பிரபல நடிகை ரேகா, ஜி.எம். குமார், டேனியல் மற்றும் லொள்ளு சபா மனோகர் ஆகியோர் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர், சிவபாலவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக வெளியீட்டை நோக்கி செல்லும் இந்த படத்தில் இசைஞானி ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. தற்போது இந்த படத்தின் First Look போஸ்ட்டரை பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளனர்.