தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வந்த மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் மாரி 2. இப்படத்தில் டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், காளி வெங்கட், மாஸ்டர் ராகவன், வித்யா பிரதீப், கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.யுவன் சங்கர் ராஜாஇப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த ரௌடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்த பாடல் யூடியூப் தளத்தில் 715 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது .
தற்போது பில்போர்ட் யூடியூப் பட்டியலில் உலக அளவில் 2019 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் பட்டியலில் ரௌடி பேபி 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது .
https://www.billboard.com/amp/articles/business/streaming/8545448/youtube-music-most-watched-daddy-yankee-lil-nas-x?__twitter_impression=true&__twitter_impression=true
https://twitter.com/YouTubeIndia/status/1202866323513999360?s=19