கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்து, தானே ஒரு முக்கிய வேடத்தில் எதிர்நாயகனாக நடித்திருக்கும் இப்படம், முற்றிலும் புதிய பரிமாணத்தில், வித்தியாசமான கதை களத்துடன் ஒரு அதிரடித் திரைப்படமாக ரசிகர்களை ஈர்க்க தயாராகி வருகிறது.
‘இணைய தலைமுறை’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுசி. ஈஸ்வர் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
மது மயக்கத்தில் ஒருவர், காதல் மயக்கத்தில் இளம் காதலர்கள், செல்ஃபி மயக்கத்தில் இளம் மாணவ-மாணவியர் என முப்பரிமாணத்தில் பயணப்படும் இக்கதை, வித்தியாசமான கதைகளத்துடனும், எதிர்பாராத திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடனும், ஜனரஞ்சகமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. மயக்கம் கலைந்து, தவறுகள் களைந்து, இலக்கை அடைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.
இப்படம் முழுவதுமே ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ள விதம் வாழ்வின் யதார்தத்தையும், இயல்பான காட்சியமைப்பின் பலத்தையும் பறைசாற்றுகிறது.
அதே நேரம், இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் முற்றிலும் வித்தியாசமான முறையில் 8 ஹெலி காமிராக்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ள விதம், தொழிட்நுட்ப முன்னேற்றத்தையும், காட்சி அமைப்பின் நுணுக்கங்களையும் பறைசாற்றுகிறது.
கதாநாயகனாக சஞ்சய் நடிக்க, ‘உறுதிகொள், வீராபுரம்’ ஆகிய படங்களில் நடித்த மேக்னா, நாயகியாக நடிக்கிறார். இவர்களோடு இணைந்து சிவகாசி முருகேசன், விஜய் டிவி ‘கலக்கப் போவது யாரு?’ புகழ் பிரபாகரன், ராணி, கமலா, சுவாமி தாஸ், காமராஜ், கல்கி ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சபரி ஒளிப்பதிவு செய்ய, வில்சி படத்தொகுப்பை கவனிக்கிறார். இளைய கம்பன் பாடல்களை எழுத டிஜே கோபிநாத் இசையமைத்து பாட, வேல்முருகன் மற்றும் பூர்ணிமாவும் இப்படத்தில் பாடியிருக்கிறார்கள்.
எஸ் ஆர் முருகன் சண்டை பயிற்சிக்கும், கம்பு முருகன் நடனத்திற்கும் பொறுப்பேற்க, வடிவமைப்பு சசி & சசி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் உருவாகியுள்ள ‘தேடு’ வருகின்ற ஜனவரி 03ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கவிருக்கிறது.
நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்
சஞ்சய் மேக்னா சிவகாசி முருகேசன் ‘கலக்கப்போவது யாரு?’ பிரபாகரன் ராணி கமலா
சுவாமி தாஸ் காமராஜ் ஜெகவீரபாண்டியன் கல்கி
தயாரிப்பு: கிஷோர் சினி ஆர்ட் தயாரிப்பாளர்: சிவகாசி முருகேசன் ஒளிப்பதிவு: சபரி
படத்தொகுப்பு: வில்சி இசை: டி ஜே கோபிநாத் பாடல்கள்: இளைய கம்பன் சண்டை பயிற்சி: எஸ் ஆர் முருகன் நடனம்: கம்பு முருகன் வடிவமைப்பு: சசி & சசி நிர்வாக தயாரிப்பாளர்கள்: பா. ஜெயகார்த்திக் & மனோஜ் கார்த்திகேயன் கதை, திரைகதை, வசனம், இயக்கம்: சுசி. ஈஸ்வர் மக்கள் தொடர்பு: நிகில் முருகன்