Tamil Movie Poster Tamil Movie Trailer

‘சங்கத்தமிழன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் .

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம்  கோபி ஆகியோர்  நடித்துள்ளனர்.

விவேக்-மெர்வின் ஆகியோர்  இசைமைப்பில் பாடல்கள் ஹிட் ஆனா இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது . அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது !

தொழில்நுட்பக்குழு :

எழுத்து & இயக்கம் – விஜய் சந்தர், தயாரிப்பு – பி.பாரதி ரெட்டி, ஒளிப்பதிவு – R.வேல்ராஜ், படத்தொகுப்பு – பிரவீன் K.L, சண்டை பயிற்சி – அனல் அரசு, கலை இயக்குனர் – பிரபாகர்
நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன் , குமரன், நடனம் – ராஜு சுந்தரம் , செரிஃப் ,சாண்டி, மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.