Tamil Actors Photos

கடல் கடந்து கண்டங்கள் கடந்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் சித்தார்த் குமாரன்!

sakthi saravanan 

 பல ஆண்டுகளாகச் சின்னத்திரையுலகில் விஜய்  மற்றும் ஜீ  தொலைக்காட்சிகளின் மூலம் இல்லங்கள் தோறும் சென்று பிரபலமானவர் சித்தார்த் குமாரன்.
 ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று  ரசிகர்களை மகிழவைத்தவர். என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து
பலர் மனசில ரெக்க கட்டி பறக்கும் அழகிய தமிழ் மகன், சூப்பர் டான்சர், Mr. கில்லாடி, என்று தொடர்ந்து இன்று வருகிற தேன்மொழியில் ஊராட்சி மன்றத் தலைவராக என்று எத்தனையோ  வேடமேற்று ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர்.
சின்னத்திரை மூலம் பலரது இல்லங்களில் அறிமுகமாகி உள்ளங்களில்  நுழைந்து கடல் கடந்து, கண்டங்கள் கடந்து ரசிகர்களைப் பெற்றிருக்கும் சித்தார்த் குமாரன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
 சித்தார்த்துக்கு Sidharth_kumaaran_fanclub என்ற பெயரில்  கனடா, அமேரிக்கா, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் ரசிகர் மன்றங்கள் சில ஆண்டுகளாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங், திரைப்பட, விளம்பர படப்பிடிப்புகளுக்கு www.actorsidharth.com – ல் இவரைத் தொடர்பு கொள்ளவும்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சித்தார்த்!