Tamil Movie Event Photos Tamil News

விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் வெற்றி

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் இன்று (22nd Dec, Sun) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.

தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தயாசத்தில் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செயலாளர் பதவிக்கு T.மன்னன் (239 வாக்குகள்)  பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்)  துணை தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணை செயலாளர் பதவிக்கு K.காளையப்பன் (226 வாக்குகள்)

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.