சூர்யா, கார்த்தி, சாய் தன்ஷிகா கலந்து கொண்ட பாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி
பாண்டியன் மாஸ்டர் என்றால் சினிமாவில் தெரியாத ஆளே இல்லை.
மாடக்குளம் ரவி ஆசான் என்பவர் தான் பாண்டியன் மாஸ்டரின் ஆசான். மாடக்குளம் ரவி என்றால் அனைவருக்கும் தெரியும். இவர் தந்தை மற்றும் இவரும் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். அவரிடமே சிஷ்யனாக இருந்த பாண்டியன் மாஸ்டர் சினிமாவில் சூர்யா, கார்த்தி, நடிகை சாய் தன்ஷிகா, ஆர்யா, விஷால், அருண் விஜய், சாந்தனு உட்பட பலருக்கும் இவர் சிலம்பம் கற்றுக் கொடுத்திருக்கிறார். இன்றும் பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். கமல் நடித்த ‘தேவர்மகன்’ படத்தில் ‘சாந்து பொட்டு’ என்று தொடங்கும் பாடலுக்கு முன்பு நடைபெறும் சண்டை பயிற்சியில் உடன் இருந்தார்.
பவர் பாண்டியன் ஆசான் சிலம்பம் ட்ரெயினிங் அகாடமி & ட்ரேடிசினல் மார்ஷியல் ஆர்ட்ஸ் சிலம்பம் ரிசர்ச் அண்ட் டெவலப்மன்ட் டிரஸ்ட் மூலம் சிலம்பம் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இவர் அகாடமியில் தற்காப்புக்காக அதிகம் கற்றுக் கொள்வது பெண்கள்தான்.
ஆயுத பூஜையை முன்னிட்டு சிலம்பம் பெல்ட் கிரேடிங் அக்டோபர் 2019 விழாவை நடத்தினார். அந்த விழாவில் கிருபா மாஸ்டர், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகை தன்ஷிகா, போன்ற பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.
நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, நடிகை தன்ஷிகா, கிருபா மாஸ்டர், மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாபெரும் நன்றியை தெரிவித்தார்.PRO :S.Priya