Tamil Movie Event Photos Tamil News

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாள் விழா

RIAZ K AHMED:PRO

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பிரமாண்ட பிறந்தநாள் & நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .

இந்த விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது . விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு .கலைஞானம் , திரு SP முத்துராமன் , திரு  கலைப்புலி S தாணு , திரு P வாசு , திரு  KS ரவிக்குமார் , திரு  ராகவா லாரன்ஸ் , திருமதி மீனா , திரு கராத்தே தியாகராஜன் , மூத்த பத்திரிக்கையாளர் திரு  S ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .

சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது .

ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி திரு VM சுதாகர் வழிகாட்டுதலின்படி , தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் திரு R ரவிச்சந்திரன் தலைமையிலும் , நிர்வாகிகளின் பங்களிப்பாலும்  இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

.