Tamil News

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

சென்ற ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நிவாரண பணிகள் சிறப்பாக நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு  ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை அனுப்பினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து லாரிகள் மூலம் நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டன. மேலும் அந்த பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் உள்ள அப்பகுதியை சார்ந்த ரஜினி மக்கள் மன்றத்தினரும் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வந்தனர் .

தற்போது நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினிகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் நாகை ரஜினி மக்கள் மன்றம் மூலமாக வீடுகட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் 10 பேரையும் நாகை மாவட்ட பொருப்பாளர்களையும் சென்னை போயஸ் இல்லத்திற்கு அழைத்து வீட்டிற்கான சாவியையும் குத்துவிளக்கு தாம்பாளம் சகிதமாக வழங்கினார் ரஜினிகாந்த்..

குறிப்பாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கோடியக்கரை மற்றும் கீழையூர் ஒன்றிய பகுதியை சார்ந்த ஈசனுர் ,தலைஞாயிறு ஒன்றியத்தை சார்ந்த வெள்ள பள்ளம், ஆலங்குடி , கோயில் பத்து , நாலு வேலுபதி ஆகிய கிராமங்களை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு  ரூ.1,85,000 – மதிப்புள்ள 218 சதுர அடி -அளவுள்ள காங்கிரட் வீடு இலவசமாக வழங்கப்பட்டது  .இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி V.M சுதாகர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.RIAZ K AHMED- P.R.O.