Tamil Actors Photos Tamil Movie Event Photos Tamil News

அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் “ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்”

பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஜாக்குவார் தங்கம் ,ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்

இப்படம் சைக்கோ திரில்லர் வகை சார்ந்தது இதில் நாயகனாக கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகையும் நாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லி நடிக்கிறார் வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்

நான் இதற்கு முன்பாக பல படங்களுக்கு துணை மற்றும் இணை பணியாற்றியுள்ளேன்

மேலும் சில குறும்படங்களை இயக்கி உள்ளேன் அதுமட்டுமல்லாது பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பல வருடங்களாக சவுண்ட் இன்ஜினியர் பணியாற்றியுள்ளேன். இப்படிப்பட்ட அனுபவத்தை கொண்டும் இதனால் ஏற்பட்ட நட்பு வைத்தும் நண்பர்களை ஒன்றிணைத்து இப்படத்தை தயாரிக்கிறேன்

இப்படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் வகையை சேர்ந்தது.

இப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்

சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்க உள்ளார். இவர் மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது