நான் தெலுங்காக இருந்தாலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது ஏவிஎம்மெய்யப்ப செட்டியார்தான் – TMJA பொங்கல் விழாவில் கின்னஸ் புகழ் பாடகி பி.சுசிலா பெருமிதம்!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் கவிதா பத்திரிகையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் பேசும் போது, நான் கொஞ்சம் உண்மையை பேசுறவன், தப்பா நினைக்காதீங்க, நீங்க நிம்மதியா இருந்தால் தான் நன்றாக இருக்க முடியும்.. எப்போது பத்திகை ஆரம்பித்ததோ அப்போது இருந்து பார்த்து வருகிறேன். நான் எடிட்டர், தயாரிப்பாளர், நான் தயாரித்த படங்கள் வெற்றி பெற்றது. என் சின்ன பையனுக்காக தான் சென்னை வந்தேன்.. பத்திரிகையாளர்கள் பலாப்பழம் போல் இருக்கிறார்கள். தெலுங்கிலும் இப்படிதான் பிரிந்து, தற்போது ஒன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.
அடுத்த விழாவில் எல்லோரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.
சங்கத்தின் ஒவ்வொரு விழாவிலும் கலைஞர்களுக்கு உதவி செய்து வழக்கம். இந்த பொங்கல் விழாவில் நடிகை சர்மிளாவிற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
பிக்பாஸ் புகழ் தர்ஷன் பேசும் போது,. இந்த விழாவில் கலந்துகொண்டது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. திரை உலகில் இருப்பவர்களுக்கு நிதி உதவி வழங்குவது சிறந்த விஷயம். இதில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பத்திரிக்கையாளர்கள் தான் நடிகர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்றார்.
இயக்குனர் சேரன் பேசும்போது, இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. படைப்புகளை முதலில் கணிப்பது பத்திரிக்கையாளர்கள் தான். இவர்களை பார்க்கும் போது எப்போதும் பயமாகவே இருக்கும். உதவி செய்யும் நோக்கம் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இவ்விழாவில் உதவி செய்வது மகிழ்ச்சி. சர்மிளாவின் நிலைமை வருத்தமளிக்கிறது. கவனக்குறைவால் நிறையபேருக்கு இதுபோல் நடக்கிறது. இவருக்கு உதவி செய்வது ஊக்கம் தருவது போன்றது.
பத்திரிக்கையாளர்கள் பிரிந்து இருப்பது காலத்தின் சூழல். அது அப்படி தான் சேரும் பிரியும். நான் இதுவரை 23 படங்கள் கடந்து வந்திருக்கிறேன். பாரதி கண்ணம்மா படத்தையும் கொண்டாடியது நீங்கள்தான். ஒரு வேலையை நடிகர்கள் சரியாக செய்தால் பத்திரிக்கையாளர்கள் நல்ல இடத்திற்கு கொண்டு செல்வார்கள். பல வெற்றியாளர்களுக்கு தூணாக இருந்து இருக்கிறார்கள்.
நிறைய சேனல்கள் இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். குறைய சொல்ல முடியாத அளவுக்கு படம் எடுக்க வேண்டும்.. நிறைய நல்ல படங்கள் காணாமல் போகிறது. எல்லா எழுத்துக்களிலும் கம்பீரம் இருக்கிறது.
நானும் ஒரு யூடியூப் ஆரம்பித்து இந்த சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய சங்கத்தின தலைவர் கவிதா “இன்று முதல் இந்த சங்கத்தின் கௌரவ ஆலோசகர்” என்ற பொறுப்பை வழங்குவதாக அறிவித்தார்.
நடிகை சர்மிளா பேசும்போது, “தை பிறந்தால் வழி பிறக்கும்.. எனக்கு இன்று நல்ல வழி பிறந்திருக்கிறது. எங்கள் அப்பாவிற்கு நிறைய பத்திரிகை நண்பர்கள் இருந்தார்கள். பிரசாந்த் கூட நடித்தேன். நான் அறிமுகம் என்பதால் தயங்கினேன். அதன்பின் எல்லா பத்திரிகைகளிலும் என் புகைப்படம் தான் அட்டைப் படமாக வந்தது. ஒரு வரியில் செய்தியை சொல்லி அதன் மூலம் பத்திரிகையை வாங்க வைப்பது பெரிய விஷயம். நடிகர்களுக்கு பத்திரிக்கையாளர்கள் முதுகெலும்பாக இருக்கிறார்கள். எனக்கு உதவி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என் பையனுக்கு தான் இந்த உதவி போய் சேரனும். என் அப்பா மறைந்த பிறகுதான் வெளி உலகம் தெரிந்து. ஆனால் என் மகன் இப்பவே வெளி உலகத்தைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான் நிச்சயம் அவன் நல்ல நிலைமைக்கு வருவான்.
பாடகி பி.சுசிலா பேசும் போது, நான் இங்க இருக்க கவிதா காரணம், எனக்கு என்ன பேசுறது தெரியல, 85 வயதாகி விட்டது. பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். எனக்கு தமிழ் சொல்லி கொடுத்து மெய்யப் செட்டியார். அதனால் தான் இப்போது தமிழில் பேச முடிகிறது. எனக்கு தமிழ் பத்திரிகையாளர்கள் அமைப்பின் விழாவில் கலந்து கொள்ள இடம் கொடுத்ததுற்கு நன்றி என்று கூறியதோடு, “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாடலை பாடினார். பி.சுசிலா அம்மையார் இது போன்ற பொது நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. வயது 85 ஆகிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் சங்க நிகழ்வில் கலந்து கொண்டது சந்தோஷமாக இருப்பதாக கூறினார் பி.சுசிலா.
இறுதியில் சங்கத்தின் செயலாளர் கோடங்கி ஆபிரகாம் நன்றி கூறினார்.
Attachments area