பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியான யோகிடா படத்தின் அதிரடி காட்சிகள்!!!
ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் யோகிடா. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தை கௌதம் கிருஷ்ணா இயக்குகிறார். தன்ஷிகா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் சிறப்பு காட்சி வெளிவந்துள்ளது. இதில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற ஒரு ஆக்ஷ்ன் காட்சியை சிறப்பாக செய்துள்ளார். படம் சிறந்த முறையில் தயாராகி வருகிறது. பெண்கள் தினமான இன்று இக்காட்சி வெளிவந்தது பெண்களால் எதையும் சாதிக்க இயலும் என்பதை வலுயுறுத்தவே. எனவே அனைவரும் திரையரங்குகளில் சென்று இப்படத்தை பார்க்க வேண்டும். மேலும் யோகிடா குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.