Tamil News

ஊடகச் செய்தி- “ராக்லைன் புரொடக்சன்ஸ்” வெங்கடேஷ் !

“உண்மை ஒருநாள் வெல்லும்..இந்த உலகம் உன் பேர் சொல்லும்”
– “ராக்லைன் புரொடக்சன்ஸ்” வெங்கடேஷ் ! – ஊடகச் செய்தி
“சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் , KS ரவிக்குமார் இயக்கத்தில்  கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘லிங்கா’ . இந்த படத்தை ராக்லைன் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்திருந்தேன் .

லிங்கா படத்தின் கதை, தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், எனது கதையைத் திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். அதனால், ‘லிங்கா’ படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார் . இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தேன் மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது.

தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வெளியாகியுள்ளது . ரஜினி சார் படம் வெளியாகும் போது இப்படி எல்லாம் பல இடையூறுகள் வரும் .ஆனால் எங்கள் படத்தில் இடம் பெறும் “உண்மை ஒருநாள் வெல்லும்..இந்த உலகம் உன் பேர் சொல்லும்” பாடல் வரிகளைப்போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குறியது “.