மகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார் |
50 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி உள்ள ஜாய் மதி பாடல் வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார். நடனம் அமைத்து அவரே பாடலுக்கு ஆடியும் உள்ளார். அந்த வீடியோ ஆல்பத்தை பார்த்த நடிகர் சந்தானபாரதி ஜாய் மதியை அழைத்து பாராட்டி அந்த வீடியோ ஆல்பத்தை வெளியிட , நடன இயக்குனரும் நடிகருமான ஜாய்மதி திரைப்பட தயாரிப்பாளரும் சினிமா பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி, தனுசு ராசி நேயர்களே படத்தின் இயக்குனர் சஞ்சய், திருமதி.ஜாய்மதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.