பட்டிதொட்டி எங்கும் சிம்புவின் குரல்!
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சிம்புவின் குரலில் விபினின் நடிப்பில் “ஞேயங் காத்தல் செய்” என்ற ஆல்பம் பாடல் ஒன்று வெளியானது. வெளியான நாள் முதல் அந்தப் பாடல் பார்வையாளர்களின் மனதை வருடி யூடூயூப்பில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக இளைஞர்கள் இந்தப் பாடலை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இந்தப் பாடல் மென்மேலும் பாராட்டுக்களைப் பெற்று இப்போது பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கத் தொடங்கி பெரிய வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.