ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா!
“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது.இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும்.”-ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா!
ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாவதாக, ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அவரைக் காண வந்த பக்தர்களுக்கு ஆன்மாவைக் கொண்டு மனித வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து பிரசங்கம் செய்தார். அதன் விபரம் வருமாறு:-
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது. மனிதனுக்குள்ள தெய்வ சக்தியை வெளிக்கொணர செய்வது. இந்த ஆத்ம சக்தியில் விவேகானந்தரோ அல்லது பல சித்தர்களோ கூட இருக்கலாம். இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், நாட்டிற்கு தேவையான நன்மைகளையும் செய்ய முடியும்.
மேலும், ஆன்மா என்பது உயிருள்ள மனிதருக்குள் இருப்பது; ஆத்மா என்பது இறந்தவர்களை குறிப்பது என்றார்.
மூன்றாவதாக, தியானம் என்கிற தவமுறையில் ஆன்மாவை உணர்தல் குறித்து தியானம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார்.
பின்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில், பக்தர்கள் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மாவிற்கு பொன்னாடை அணிவித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மா அருளாசி வழங்கினார்.