முகவரி இயக்குனர் வி இசட் துரை அவர்களின் அசோசியேட் இயக்குனரின் குறும்படம் ‘குருடனின் நண்பன்’ நேற்று திரையுலக பிரபலங்களால் யூடியுபில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள் பிரேம்ஜி, டேனியல் பாலாஜி , கன்னிமாடம் ஶ்ரீராம் கார்த்திக், வெற்றி சுடலை, தயாரிப்பாளர்கள் பிக் பிரிண்ட் கார்த்திக், லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் அவர்கள் படத்தை வெளியிட்டு பாராட்டினர்.
“கமர்சியல் குறும்படத்துக்கு நடுவுல கன்டென்டோட ஒரு சிறுகதை போல ‘குருடனின் நண்பன்’ இருந்ததாக நடிகர் டேனியல் பாலாஜி பாராட்டினார்.
கடந்த வாரம் இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இந்த குழுவினரை வெகுவாக பாராட்டினார் வி இசட் துரை. குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
டாய்னா பிக்சர்ஸ் (Diana Pictures) இதனை தன் யுடியுப் சேனலில் வெளியிட்டது.
நடிகர்கள்: மனோ, மில்லர் இயக்கம்: முரளி K ஒளிப்பதிவு: K.கார்த்திக் இசை: SPURUGEN பால் படத்தொகுப்பு: AVS பிரேம் தயாரிப்பு: ஒளி நாடா.