Irandam Ulagaporin Kadaisi Gundu Movie Review {Rating: 3/5}
Rating: 3 out of 5 Irandam Ulagaporin Kadaisi Gundu : Engaging Explosion STORY: A bomb, which was used during World War-II, gets washed ashore. It finally reaches a metal scrap…
Rating: 3 out of 5 Irandam Ulagaporin Kadaisi Gundu : Engaging Explosion STORY: A bomb, which was used during World War-II, gets washed ashore. It finally reaches a metal scrap…
Manavai Bhuvan:PRO ஒரு கமர்சியல் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கியம். அதேபோல் ஒரு பாடலின் வெற்றிக்கு பாடகர்களின் குரலும் மிக முக்கியம். சமீபத்தில் வெளியான அடுத்தசாட்டை படத்தில் இருபாடல்கள் குரலுக்காகவே பெரிதாக கவனிக்கப்பட்டது. அந்தக்குரல் சத்யன் இளங்கோவின் குரல். ஈழத்தை பூர்வீகமாக கொண்ட சத்யன் இளங்கோ அடுத்தசாட்டை படம் மூலமாக தனிப்பெரும் கவனம் பெற்ற பாடகராக உருவெடுத்துள்ளார். “கரிகாடு தானே பேரழகு” “அவன் வருவான் என இருந்தேன்” என்ற இரு பாடல்களும் சத்யன் இளங்கோ குரல் கொண்ட பாடல்கள். பிரபு திலக் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்து, அன்பழகன் இயக்கிய அடுத்தசாட்டை படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்து இருந்தார். ஒரு பாடகரின் குரலுக்கு இசை அமைப்பாளர் மகுடம் சூட்டும் போது அப்பாடகர் மேல் ஒட்டுமொத்த வெளிச்சமும் பதிவாகும். அப்படி ஒரு வெளிச்சம் கிடைத்த சத்யன் இளங்கோ ஒரு பாடகராக மட்டும் அல்லாமல் ஒரு நடிகராகவும் பரிணாமம் பெற்றவர். 2012-ல் ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ் திரைப்படமான “இனியவளே காத்திருப்பேன்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்படத்தை அவரது தந்தையான ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். Ravi & Jane, Thousand sons என்ற இரண்டு ஆஸ்திரேலியா, குறும்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நம் நெஞ்சின் அடியாழம் வரை தன் குரலால் இறங்கும் ஈழத்து சத்யன் இளங்கோ இனி தமிழ்சினிமாவில் பாடகராகவும் நடிகராகவும் அடுத்தடுத்த உயரங்களை தொட இருக்கிறார்.
வீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “ கூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில் ” புள்ளீங்கோ” என…
அலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திருவாளர் பஞ்சாங்கம்! அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் ‘திருவாளர் பஞ்சாங்கம்’. இப்படத்தில் நாயகனாக ‘ஆனந்த் நாக்’ நடித்துள்ளார் காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில்…