மிகப்பெரிய வெற்றியடைந்த ஸ்கிரிப்ட் செய்யப்படாத ‘காமிக்ஸ்டான்‘ –ன் தமிழ் வடிவமான காமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.
அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியான காமிக்ஸ்டான் இந்தியில் 2 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய பிறகு அதன் தமிழ் வெர்ஷனை இப்போது பெறுகிறது.
பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் 8 எபிசோடுகளுக்கு போட்டியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் நடுவர்களாகவும் இருந்து அடுத்த சிறந்த ஸ்டேண்ட் – அப் நகைச்சுவை கலைஞரை தேர்ந்தெடுப்பார்கள்.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் கா
அமேசான் ப்ரைம் வீடியோ இன்று காமிக்ஸ்டான் செம காமெடி பா-வின் டிரெய்லரை வெளியிட்டது, இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்டானின் தமிழ் வெர்ஷன். இந்த தொடரின் வெளியீடு தமிழில் ஒரிஜினல் கண்டெண்ட் வருவதில் ப்ரைம் வீடியோவின் ஆர்வத்தை குறிக்கிறது. இந்த புதிய தொடரில், தமிழ் காமெடி துறையின் வல்லுநர்களாக இருக்கும், மூன்று பெரிய நகைச்சுவை கலைஞர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள், தமிழ் ஸ்டேண்ட்-அப் காமெடியின் ராஜாவாகவோ அல்லது நகைச்சுவை ராணியாகவோ ஆக போட்டியிடுவார்கள். ஒன்லி மச் லவ்டர் (ஓஎம்எல்) என்டர்டெயின்மென்ட் உருவாக்கத்தில் வெளிவரும், தமிழ் மொழியில் முதல் முதலாக வெளியிடப்படும் இந்த வகையான தொடரின் எட்டு-எபிசோடுகளும் ,அனைத்து எபிசோடுகளையும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும். வித்யுலேகா ராமன் மற்றும் மெர்வின் ரோசாரியொ சேர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். அற்புதமான புதிய ஸ்கிரிப்ட் செய்யப்படாத நகைச்சுவைத் தொடர், அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்தியேகமாக உலகளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கப்படும்.
தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த காமெடி நிகழ்ச்சிகள் புதியதில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்ட விதம் புதியதாகவும் உங்களை கவரும் வகையிலும் இருக்கும். இது தான் முதல் முறை ஸ்டேண்ட்-அப் காமெடிக்கான போட்டி நிகழ்ச்சி ஒன்று பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருப்பது. காமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவத்துமான பல விஷயங்களை போட்டியாளர்கள் மூலம் கொண்டுவரும் என்று நம்புகிறோம். காமிக்ஸ்டான் செம காமெடி பா பட்டத்தை வெல்வதற்காக ஆறு சிறந்த போட்டியாளர் போட்டியிடும் நிகழ்ச்சியைப் பற்றின ஒரு முன்னோட்டத்தை இந்த டிரெயிலர் தருகிறது.
அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கூறுகையில், “ அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட அல்லது ஸ்கிரிப்ட் செய்யப்படாத தொடர் அல்லது திரைப்படங்கள் உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் தொடர்புடைய கண்டெண்ட்-ஐ கொண்டிருக்கும் போது அது எப்போதுமே எங்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறது; ஆகவே, எங்கள் முதல் ஸ்கிரிப்ட் செய்யப்படாத ஒரிஜினல் தொடரை தமிழ் மொழியில் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அமேசான் ப்ரைம் வீடியோ எப்போதும் அதன் பார்வையாளர்களுக்காக புதிய மற்றும் தனித்துவமான கண்டெண்ட்-ஐ உருவாக்க முயல்கிறது, அப்படிப்பட்ட ஒன்றுதான் காமிக்ஸ்டான். இதில் நகைச்சுவை நடிகர்கள் அதை காமிக்ஸ்டான் பட்டத்தை வெல்ல போராடுவார்கள். காமிக்ஸ்டானின் முதல் இரண்டு சீசன்களுக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த மிகுந்த வரவேற்பு, இளைஞர்களுக்கு ஸ்டாண்டப் காமெடி மேலான ஆர்வத்தை அதிகரித்தது. இது வெற்றியாளர்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், பல திறமையான போட்டியாளர்கள் ஒன்றுகூடும் வேடந்தாங்கலாகவும் மாறிவிட்டது! எங்கள் தமிழ் பார்வையாளர்களைக் கவரும் வகையில் உள்ளூர் கலாச்சார நுணுக்கங்களோடு தமிழில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்தத் தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
‘உள்ளூரின் திறமையான கலைஞர்களுக்கு உலகளாவிய ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதைக் நோக்கமாகக் கொண்ட காமிக்ஸ்டான் செம காமெடி பா போன்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சிகளை அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணைந்து நாங்கள் கொடுத்துள்ளோம், அதில் காமிக்ஸ்டான் எங்களின் கூட்டு முயற்சியில் நகைச்சுவையில் புதிய, புதிய திறமைகளை கண்டுபிடித்து அவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை தரும் நிகழ்ச்சியாக இருந்தது . காமிக்ஸ்டான் செம காமெடி பா மூலம், அதே வேகத்தில், பார்வையாளர்களுக்கு மிகவும் ஆக்கபூர்வமான, சுவாரஸ்யமான நகைச்சுவை நிகழ்ச்சிகளை கொண்டு வர நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம் என்று. ” ஓ.எம்.எல் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி துருவ் ஷெத் கூறினார்.
லிங்க்-
சுருக்கம்:
மிகவும் புகழ்பெற்ற தமிழ் ஸ்டாண்டப் காமெடி நடிகர்களால் ஆலோசனை அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட காமிக்ஸ்டான் தமிழில் பங்கேற்கும் ஆர்வமுள்ள நகைச்சுவை நடிகர்கள் தமிழ் ஸ்டாண்ட்-அப் காமெடியின் “நகைச்சுவையின் எதிர்காலம்” ஆக போட்டியிடுகின்றனர். ஓன்லி மச் லவ்டர் (ஓஎம்எல்) தயாரித்த, காமிக்ஸ்டான் தமிழை அர்ஜுன் கார்த்திகேயன் இயக்கியுள்ளார், டி. ஜெய் ஆதித்யாவும், மெர்வின் ரொசாரியோ ஏ ஆகியோரும் இந்தத் தொடரின் எழுத்தாளர்களாக இருக்கின்றனர்.
பிரத்தியேகமாக அமேசான் ப்ரைம் வீடியோவில் 2020 செப்டம்பர் 11 முதல் காமிக்ஸ்டான் தமிழின் அனைத்து எபிசோடுகளையும் பாருங்கள்.
ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்-பில் ப்ரைம் உறுப்பினர்கள் காமிக்ஸ்டான்-ஐ எங்கும், எந்த நேரத்திலும் பார்க்க முடியும். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-க்கு கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.