Tamil Movie Poster Tamil Movie Trailer Videos

அமேசான் ஒரிஜினல் தொடர் Bandish Bandits இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் வீடியோவில் பார்த்து மகிழுங்கள்

பன்முகத்தன்மை கொண்ட நசீருதீன் ஷா, அதுல் குல்கர்னி, ராஜேஷ் தைலாங், ஷீபா சத்தா நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தொடர் Bandish Bandits, பாப் மற்றும் கிளாசிக்கல் என்னும் மாறுபட்ட இசை பின்னணியைச் சேர்ந்த இரண்டு இளம் கலைஞர்கள் ராதே மற்றும் தமன்னாவின் காதல் கதையாகும்.
நேயர்களில் பரலாக வரவேற்ப்பைப் பெற்ற அமேசான் அசல் தொடர் Bandish Bandits, ஆகஸ்ட் 04, 2020 அன்று வெளியிடப்பட்டது. இத்தொடர், இந்தியா முழுவதும், தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்காக தற்போது மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 16, துவங்கி, இந்த பெரும் வெற்றி பெற்ற பிரபலமான காதல் நாடகத் தொடரான Bandish Bandits இவ்விரண்டு பிராந்திய மொழிகளிலும் கிடைக்கப்பெறவுள்ளது.
அமிர்த்பால் சிங் பிந்த்ரா (Bang Baaja Baaraat) தயாரித்து உருவாக்கிய மற்றும் ஆனந்த் திவாரி (Love Per Square Foot) இயக்கியுள்ள இந்தத் தொடர் ஜோத்பூரை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பாப் மற்றும் கிளாசிக்கல் என்னும் மாறுபட்ட பின்னணிகளைச் சேர்ந்த இரண்டு இளம் இசைக்கலைஞர்களின் கதையைச் சொல்கிறது. இந்த பத்து பாகங்கள் கொண்ட தொடரில், இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகராக வளர்ந்து வரும் திறமையான நட்சத்திரம் ரித்விக் பெளமிக் (Dhuusar) ராதேவாகவும் மற்றும்   ஷ்ரேயா சௌத்ரி (Dear Maya) பாப் நட்சத்திரமாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் நஸ்ருதீன் ஷா (A Wednesday, The League of Extraordinary Gentlemen), அதுல் குல்கர்னி (Page 3, Rang De Basanti), குணால் ராய் கபூர் (Love Per Square Foot, Delhi Belly), ஷீபா சத்தா (Mirzapur, Talaash) மற்றும் ராஜேஷ் தைலாங் (Mirzapur, The Second Best Exotic Marigold Hotel) உள்ளிட்ட மூத்த நடிகர்களும் நடித்துள்ளனர்.
இத்தொடரின் மூலம், இசையமைப்பாளர்கள்  ஷங்கர்-எசான்-லாய் டிஜிட்டல் உலகில் அறிமுகமாகியுள்ளனர் மற்றும் சிறந்த அசல் ஒலிப்பதிவுகளை வழங்கியுள்ளனர். இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் டிசம்பர் 16 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரத்தியேகமாக Bandish Bandits தொடரைப் பார்த்து மகிழலாம்.
கதைச்சுருக்கம்:
Bandish Bandits ராதே மற்றும் தமன்னாவின் கதையாகும். ராதே, தனது தாத்தாவின் பாரம்பரியத்தை பின்பற்றுவதை லட்சியமாகக் கொண்ட, இசைஞானத்துடன் பிறந்த ஒரு கலைஞராவார். தமன்னா ஒரு வளர்ந்து வரும் பாப் நட்சத்திரமாவார் மற்றும் இந்தியாவின் முதல் சர்வதேச பாப் நட்சத்திரம் ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவராவார். ராதே தமன்னாவை காதலிக்கத் துவங்கியவுடன் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.  தமன்னாவின் லட்சியத்தை ஈடேற்ற உதவுவதா அல்லது தனது சொந்த இசை மற்றும் குடும்ப பாரம்பரியத்தை காப்பாற்றுவதா என்னும் சிக்கலில், இரண்டிலும் ராதே தவறும் நிலை ஏற்பட, அனைத்தையும் இழக்கும் நிலைக்கு அவர் தள்ளப்படுகையில் அதில் வெற்றி பெறுகிறாரா என்பதே இதன் கதையாகும்.
டிரெய்லரை காண : https://youtu.be/UhU57OgGp50