பாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் ?
மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “நினைவோ ஒரு பறவை”.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.
ஹரிபாஸ்கர் பாடியுள்ள “இறகி இறகி” எனும் பாடல் வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது !
50 வயது நிரம்பிய கணவன் – மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் எப்படி பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.
ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது தமனின் இசையா? என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.
இந்த படத்தின் “மீனா மினுக்கி” எனும் பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்பாடலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்ததாக ஹரிபாஸ்கர் பாடியுள்ள “இறகி இறகி” எனும் பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது .
இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள். வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர். வயதான காதலர்களாக பாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் என்பதை லாக் டௌன் முடிந்த பிறகு படக்குழுவினர் அறிவிக்கின்றனர்.