Video Songs Videos

கணேசாபுரம் படத்திலிருந்து *தடதட ரயிலா* எனும் பாடல் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் தயாரிக்கும் கணேசாபுரம் படத்திலிருந்து *தடதட ரயிலா* எனும் பாடல் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இந்த பாடலை பிரபல பாடகி  சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். இப்படத்திற்கு ராஜாசாய் இசையமைத்துள்ளார்,பா.இனியவன் பாடல் எழுதி உள்ளார்…
படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனம் நாயகன் சின்னா எழுதியுள்ளார்.. அவரது நீண்டகால நண்பரான வீராங்கன். K  இயக்கி உள்ளார்… திரு P. காசிமாயன் அவர்கள் தயாரித்துள்ளார்.ஒளிப்பதிவு B. வாசு, படத்தொகுப்பு கிரேசன்  A.C.A,.
படத்தின் கதைசுருக்கம்: 
தனது முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் கதாநாயகன்  முதலாளிக்காக களவுதொழிலில் ஈடுபட்டு வாழ்ந்து வரும் அவனுக்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. 
காதலிக்கு கதாநாயகனின் களவு தொழில் பிடிக்கவில்லை 
ஒரு கட்டத்தில் காதலியோடு சேர வேண்டும் இல்லையேல் முதலாளியோடு சேர வேண்டும் என்ற சூழ்நிலை நாயகனுக்கு உருவாகிறது
களவு தொழிலை விட்டு காதலியுடன் சென்றானா? அல்லது தனது முதலாளிக்கு விசுவாசமாக இருப்பதற்காக காதலை துறந்தனா?  என்பதை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ள படம்தான் இந்த கணேசாபுரம் .
கதை நாயகனாக சின்னா நடித்துள்ளார். நாயகியாக ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளார்.
 இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் “குட்டிபுலி” ராஜசிம்மன் ,”கயல்” பெரேரா, “ராட்சசன்” பசுபதிராஜ் , “பில்லா பாண்டி இயக்குனர்” சரவணசக்தி, ஹலோ கந்தசாமி, காசிமாயன், ஹாரினி ப்ரியா மற்றும் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் “டிக் டாக்” புகழ் ராஜ்பிரியன் அவர்கள் நடித்துள்ளார்.
இப்படம் 1998ஆம் ஆண்டை குறிக்கும் கதைக்களம். கைபேசிகள் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளை குறிப்பிடாத ஒரு திரைபடத்தை மிக எதார்த்தமாகவும் கிராமிய மண்மனம் மாறாது எடுத்திருக்கிறார்கள்.