நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான், அதை நான் என்றும் மறவேன்.
இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் ஆரி அருஜுனா..