’வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் ’சுமோ’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருக்கிறார்.
இந்தோ-ஜப்பானிஸ் படமான ‘சுமோ’ சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். பல காட்சிகள் ஜப்பானில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் , யோகி பாபு நடித்திருக்கிறார்கள் .குழந்தை முதல் வயதானவர் வரை ரசிக்கக்கூடிய ஜனரஞ்சகமான திரைப்படம் இது. நடிகர் சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுமோ படத்தின் ட்ரைலர் நடிகர் சிவாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது.ட்ரைலரை இசை புயல் AR ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார் .
தொழிநுட்பக்குழு :
இயக்கம் – எஸ்.பி. ஹோசிமின் தயாரிப்பு – வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிர்வாக தயாரிப்பு – அஷ்வின் குமார் திரைக்கதை – வசனம் – மிர்ச்சி சிவா ஒளிப்பதிவு – ராஜிவ் மேனன் இசை – நிவாஸ் கே பிரசன்னா படத்தொகுப்பு – பிரவீன் K L கலை இயக்கம் – கார்த்திக் மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்