ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..
ஜிகுனா படத்தை தயாரித்தவர் “திருக்கடல் உதயம்” இவர் தனது மூன்றாவது தயாரிப்பான பிரேக்கிங் நியூஸ் என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இந்த படத்தை அந்நியன், முதல்வன், சிவாஜி போன்ற படங்களுக்கு Visual Effects துறையில் இருந்து பணியாற்றிய அண்ட்ரோ பாண்டியன் டைரக்ட்டு செய்கிறார்.
இயக்குனர் கூறுகையில்: ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷ்ன் படம், மிக பிரமாண்டமாக பொருள் செலவில் தயாராகிறது, இதில் சண்டை காட்சிகளில் ரோபோட்ரானிக், அனிமேட்ரோனிக் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம் மற்றும் Visual Effects யின் பங்கு அதிகமாக உள்ளது என்பதால் பாதி படத்திற்கு மேல் Green மற்றும் Blue மேட்டிலேயே படமாக்கி வருகிறோம், காதல், எமோஷன், சென்டிமெண்டுடன் கலந்த கமர்சியல் படமாக தயாராகிறது இவ்வாறு இயக்குனர் கூறினார்.
ஜெய், அறிமுக நாயகி பானு, சுறா படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ், இருவரும் இந்த படத்தில் வில்லன்களாக வருகிறார்கள், ஜெ பிரகாஷ், இந்தரஜா, சந்தானா பாரதி, மோகன் ராம், பழ கருப்பையா P.L. தேனப்பன் மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஜானி லால்,எடிட்டிங் அன்ட்டனி, கலை N.M.மகேஷ், நடனம் ராதிகா, Visual Effects மேற்பார்வை தினேஷ் குமார், விஷால் பீட்டர் இசையமைக்க கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் அண்ட்ரோ பாண்டியன்.-PRO ஷேக்,