Tamil Movie Event Photos Tamil News

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

மாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

தற்போது தமிழகமே எதிர்பார்க்கும் விஜய்64 படத்தை இயக்கி வருகிறார்.

படவெளியீட்டை முன்னிட்டு அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார். அவர் பேசியதும்,
படம் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மாநகரம் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள் தான். கைதி முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின வாழ்த்துக்களோடு உங்களை இன்று சந்திக்கிறேன்.

இந்தப்படத்தில் ஏன் ஹிரோயின் இல்லை ?

இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹிரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.

உங்களின் இரு படங்களும் இரவில் நடக்கிறதே.. இரவின் மீது அப்படி என்ன காதல் ?
இரவுகளிலேயே படம் எடுப்பது திட்டமிட்டு எல்லாம் அப்படி  செய்யவில்லை. மாநகரம் எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக்கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

கார்த்தி இதில் என்ன மாதிரி வருகிறார் ?

படத்தில் கார்த்தியை மையப்படுத்தி தான் கதை ஹிரோயின் இல்லை எனும் போது அவரைச் சுற்றி தான் எல்லாமும் நடக்கும்.  இந்தப்படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் பருத்தி வீரன் போல  இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக்கொண்டதால் தான்
இந்தப்படமே  உருவானது.
இந்தக்கதையை சொன்னவுடனே கார்த்தி ஒத்துக்கொண்டார் அவர் ஹிரோயின் இல்லை காமெடி இல்லை என எதுவும் கேட்கவில்லை. அவர் ஒத்துழைப்பு அபாரமானது.

இந்தகதை முதலில் வேறொரு ஹிரோவுக்காக ரெடியானதா ?
இந்தப்படத்தின் பாதிப்பு எங்கிருந்து உருவானது ?

இந்தப்படம் ஹாலிவுட்டில் வந்த டை ஹார்ட் படத்தின் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லலாம்.

படத்தில் பெண் கதாப்பாத்திரங்களே இல்லையா ?

பெண் கதாப்பாத்திரங்களே இல்லை என்பது நிஜம் அல்ல. இதில் மூன்று முக்கியமான பெண் பாத்திரங்கள் இருக்கிறார்கள். கதாநாயகிக்கான தேவை இல்லை. அதனால் இதில் வைக்கவில்லை. மொத்தப்படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் அதற்கான இடம் படத்தில் இல்லை அவ்வளவு தான்.

இரவில் ஷீட் செய்தது எப்படி இருந்தது ?

இரவில் எடுப்பது சவாலாகத்தான் இருந்தது. இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம் இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம் தான். நல்ல டீம் அமைந்தது.

விஜய் 64 என்ன மாதிரி படம் ?

அடுத்த படம் பற்றி மற்றொரு தருணத்தில் பேசுகிறேன் அது இப்போது தான் ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

விஜய் கைதி பார்த்து விட்டாரா ?

படம் இன்னும் விஜய் சார் பார்க்கவில்லை. இப்பொழுது தான் வேலைகளே முடிந்தது. என் தயாரிப்பாளரே இன்னும் பார்க்கவில்லை. இனிமேல் தான் எல்லோருக்கும் பார்ப்பார்கள்.

தீபாவளிக்கு பிகில் வருகிறதே எது ஜெயிக்க விருப்பம் ?

தீபாவளிக்கு இரண்டு படங்கள் வருகிறது. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் தான். “பிகில்”, “கைதி” இரண்டும் பாருங்கள். நன்றி-JOHNSON PRO

.