3வருட உழைப்பையும் அறிவையும் திருடும் கும்பலுக்கு டி.ஆர்.துணை போகலாமா…?
“டைம் இல்ல” இயக்குனர் சதிஷ் கர்ணா குமுறல்
அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘டைம் இல்ல’. இந்த படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன்.
இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குனர் என்றும் பேர் போட்டுக் கொண்டார்.
மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து மீண்டும் சென்சார் செல்லவிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.
இது என்ன மாதிரியான திருட்டு வேலை என்று தெரியாமல் புலம்புகிறார் இயக்குனர். ஒரு படத்தை இயக்குவது என்பது தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்து உழைக்கும் இயக்குனருக்கு கிடைக்கும் இப்படிப்பட்ட அவமரியாதையை யார் வந்து கேட்பது…
இதற்கு தயாரிப்பாளரிடம் இயக்குனர் விளக்கம் கேட்டதற்கு, “இயக்குனர் பாலா ரீமேக் பன்ன படத்துல இருந்து பாலாவையே தூக்கி போடலியா” அப்படீன்னு சொல்றாராம்.
அப்படக்கம்பெனி பாலாவ தூக்கிட்டு, அவர் இயக்கிய ஒரு காட்சிய கூட அவர் பயன்படுத்தல என்பது தயாரிப்பாளர் மனோ பார்த்திபனுக்கு தெரியுமா., தெரியாதா..??
ஒரு இயக்குனரை அந்த படத்திலிருந்து தூக்க வேண்டும் என்றால், நீங்கள் படம் முழுவதையும் வேறு ஒரு கதை கொண்டு எடுக்க வேண்டும்…
இப்படி அடுத்தவர் உழைப்பையும், அறிவையும் திருடும் கும்பல் ஒன்று, கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறது…
இந்த அறிவு திருடும் கும்பலுக்கு பிரபல இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு கொடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்ததுதான் கொடுமை.
காரணம், டி.ராஜேந்திரன் உயிருள்ள வரை உஷா இயக்கி முடித்த போது அவருக்கும் இதே போல சிக்கல் வந்தது. பல போராட்டத்துக்கு பின் தான் இயக்குனர் அடையாளமே அவருக்கு கிடைத்தது. அப்படி இருக்கும் போது ஒரு படைப்பாளியின் உணர்வை புரியாதவரா டி.ஆர்.
தயாரிப்பாளர் நடிகர் மனோ பார்த்திபன் எந்த சமரசத்திற்கும் வராததால் வேறு வழியின்றி தனது அடையாளத்தை காப்பாற்றி கொள்ள முறைப்படி, சென்சார் போர்டு, கில்டு சங்கம், காவல்துறை என அனைத்து இடங்களிலும் இயக்குனர் சதீஷ் கர்ணா புகார் கொடுத்திருக்கிறார்.