காலங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் நீங்காது – TMJA இரங்கல்

நகைச்சுவை நடிகர்களில் தனக்கென தனி பாதை வகுத்து சமூக சீர்கேடுகளை தன் காட்சிகள் மூலமாக எடுத்து சொல்லி விவேகமாக விவரித்த சின்னக் கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் இன்று நம்முடன் இல்லை.
பழகியவர்  உடல் நலனில் அதிக அக்கறையோடு அடிக்கடி நலம் விசாரிக்கும்  அன்பான நண்பரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு.
அதோடு, பசுமை தமிழகத்தை காண வேண்டும் என்பதற்காக இவர் நட்ட பல லட்சம் மரக்கன்றுகளின் பசுமை போல விவேக் அவர்களின் நினைவுகளும் மக்கள் மனசில் பசுமையாக நிலைக்கும்.
காலத்தால் அழிக்க முடியாத பல நல்ல கருத்துக்களை மக்களுக்கு தன் நடிப்பின் மூலமாக வெளிகொணர்ந்த மாபெரும் கலைஞன் மறைவால் வாடும் கலைக் குடும்பத்தாரின் துக்கத்தில் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) தன்னையும் இணைத்துக் கொள்கிறது. 
மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகமாகி மரணத்திற்கு முதல் நாள் வரை மக்களுக்கு மன உறுதியுடன் இருங்கள் என நம்பிக்கை அளித்த மாபெரும் கலைஞனின் மரணம் தமிழ் சினிமாவுக்கும், தமிழ் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்தாலும் அவர் விதைத்த சமூக சீர்திருத்த கருத்துக்கள் காலங்கள் உள்ளவரை நிலைத்து நிற்கும். 
ஆழ்ந்த வருத்தத்துடன்
நிர்வாகிகள் & உறுப்பினர்கள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்(TMJA), சென்னை.