ஸ்டெப்ஸ்(STEPS) பெப்சி(FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEPSI) இரண்டும் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமான
பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இரு சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் (28 – 11-2019 வியாழன்)அன்று கையெழுத்தானது.

அந்த கூட்டத்தில் இரு சங்கங்களின் சார்பாக கலந்துகொண்டவர்கள் விபரம் வருமாறு

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) சார்பாக கலந்துகொண்டவர்கள் 1,திருமதி.சுஜாதா விஜயகுமார் -தலைவர்  2, திருமதி. குஷ்பு சுந்தர் – பொதுசெயலாளர் , 3,திரு. D.R.பாலேஷ்வர் – பொருளாளர் 4, திரு.T.V.சங்கர்-இணைச்செயலாளர் 5, திரு. ஹேமந்த்குமார் ,செயற்குழு உறுப்பினர் .

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் (FEFSI) சார்பாக 1.திரு.R.K .செல்வமணி – தலைவர் , 2. A. சண்முகம்- செயலாளர் , 3.திரு.B.N.சுவாமிநாதன் – பொருளாளர்,  மற்றும் பெப்சி நிர்வாகத்தை சேர்ந்த இன்னும் சிலரும்கலந்துகொண்டனர்

இந்நிகழ்ச்சியின் முடிவில் இரு சங்கங்களின் சார்பாக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டனர்..Winsun C.M PRO