பெண் விவாகரத்தில் சிக்கிய முகிலன், அன்றே சொன்ன‌ சென்னை விஷன், கன்ஃபர்ம் செய்யும் சிபிசிஐடி

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமான சில நாட்களிலியே, அவர் ஒரு பெண் நட்பு சம்மந்தமா சிக்கலில் இருந்ததாகவும், அது கூட அவர் காணாமல் போனதுக்கு காரணாமாக இருக்கலாம் என்றும் சென்னை விஷன் செய்தி வெளியிட்டு இருந்தது.

தற்போது முகிலன் மாயமான வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையும் அதை ஊர்ஜிதம் செய்கிறது.

‘தமிழகம் முழுவதும் 40 தனிப்படை அமைத்து, இதுவரை 251 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எழும்பூர் ரெயில் நிலையம் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம்.

தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரி பிணவறைகளில் உள்ள 123 அனாதை ஆண் பிணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் எதுவும் பொருந்தவில்லை. நெருக்கமான பெண் நண்பர் ஒருவரை முகிலன் புறக்கணித்ததால், பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிப்ரவரி 17-ந் தேதி இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை நெருங்கிய நண்பர்கள் சிலர் சமரச பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர். இதை தவிர்க்க முகிலன் தலைமறைவாகி இருக்கலாம் என்று அந்த பெண், போலீசாரிடம் சாட்சியம் அளித்துள்ளார். முகிலனை தீவிரமாக தேடி வருகின்றோம்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

காணாமல்போன முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி திபேன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் சத்ய நாராயணன், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 15-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவணங்களை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார் சமூக செயற்பாட்டாளர் முகிலன். அன்று மாலையே ஊருக்கு புறப்படுவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தவர் ஊர் சென்றடையவில்லை என கூறப்படுகிறது.

முகிலனின் மனைவி பூங்கொடியோ, “கடைசியாக பேசியபோது அவர் மதுரைக்குச் செல்வதாகச் சொன்னார். அதற்குப் பிறகு அவரிடமிருந்து தகவல் இல்லை. நாங்கள் அடிக்கடி போன் செய்து பேசுவதில்லை. அதனால், அவர் புறப்பட்டாரா, வந்துகொண்டிருக்கிறாரா என்பதையெல்லாம் விசாரிக்கவில்லை,” என்று தெரிவித்திருந்தார்.