Why Vasanthabalan angry over Vishal Reason reveale

வசந்தபாலனுக்கு ஏன் விஷால் மேல கொலவெறி? இது தான் காரணாமா?

சமீபத்தில் ஒர் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலை பிடி பிடினு பிடிச்சிட்டார். மேலும் அவர் தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிக்கும் வரை தமிழ் சினிமாவை இழுத்து மூடும்படி ஆவேசமாக பேசினார்.

பொது நலன் கருதி என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய வசந்தபாலன், “சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது.

தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் திரையரங்குக்கு சென்று பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்”னு ரொம்பவே ஆவேசமா பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது கண்டுபிடித்து விட்டு அமைதியாக இருக்கிறீர்களா என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய இயக்குநர் மிஷ்கின், வசந்தபாலன் கூறுவதுபோல் பலரும் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆனால், தமிழ்ராக்கர்ஸை ஒழிக்க இரவு பகலாக விஷால் கஷ்டப்பட்டதை கண்கூடாக பக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன் என்று கூறினார்.

இதுக்கு நடுவுல, வசந்தபாலனுக்கு திரைத்துறை மேல உண்மையான அக்கறை இருந்தாலும், விஷால் மேல ஒரு திரைப்படம் சம்மந்தமா மனக்கசப்பு இருந்ததாகவும், அதுவும், பைரசி பிரச்சனையும் சேர்ந்து தான் இப்படி வெடிச்சதாகவும் சொல்றாங்க.