இளமையை தக்கவைக்கும் வெள்ளைத் தங்கம் வி-ஷோன் (V Schoen)
இன்றைய சூழலிலும் தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், உலகின் சில நாடுகளிலும் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக அதற்கு நிகரான ஊட்டச்சத்தினை கொண்டிருக்கும் கழுதை பாலை புகட்டுவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். மேலும் மாற்று மருத்துவத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கழுதை பால் கொடுப்பதையும் முன்னோர்கள் மூலமாக அறிந்திருக்கிறோம்.
பிறக்கும்போதே சுவாசம் தொடர்பான சவாலுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களின் சுவாச பிரச்சனை குணப்படுத்த அவர்களுக்கு கழுதை பால் ஊட்டுவதையும் அறிந்திருக்கிறோம். வெகு சிலர் உலக அழகியாக இன்றுவரை போற்றப்படும் எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா தன்னுடைய மேனி அழகை பராமரிக்க கழுதைப் பாலில் குளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் என்பதையும் அறிந்திருக்கிறார்கள். கழுதைப்பால் குறித்து இப்படி பல விஷயங்களை கேள்விப்பட்ட நாங்கள், தற்போது இதனை எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஒரு தனியார் நிறுவனம் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கிறது என்பதை அறிந்தவுடன் அதைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வதற்காக, அதனை தயாரித்து வழங்கும் வி-ஷோன் (V-Schon)என்னும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டோம்.
உங்களைப் பற்றி..?
மெர்சி சரண்யா மோகன் ராஜ் (Mercy Sharanya Mohanraj), ஷர்மிளா கஜேந்திரன்(Sharmila Gajendran), மோகன லட்சுமி சுதர்சன் (Mohanalakshmi Sudharsan) ஆகிய நாங்கள் மூவரும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்கள். மருந்தக துறையில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். மருந்தகத்தில் மருத்துவ ஆராய்ச்சி. பகுப்பாய்வு. சந்தை படுத்துதல் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி. நிறைய ஏற்றத்தாழ்வுகளை கண்டு இருக்கிறோம்.
வி-ஷோன் (V Schoen) மூலமாக ஏற்படுத்த விரும்பும் வெண்மை புரட்சி குறித்து..?
ஒவ்வொரு பெண்ணும் தாய்மை அடையும்போது, அவர்களுக்கு தங்களின் வாழ்க்கையில் ஒரு வேகத்தடையை எதிர்கொள்கிறார்கள். இந்த காலகட்டத்தின் போது அவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பெண்கள் தலை முடி உதிர்தல் மற்றும் சரும பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதனை களைய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் மருந்தக துறையில் அனுபவம் பெற்றிருப்பதால், புதிய தயாரிப்புகளை கண்டறிந்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற தேடல் எங்கள் மூவருக்கும் இருந்தது. இதுதொடர்பாக பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டோம். ஆனால் அவற்றில் எங்களுக்கு முழுமையான மனநிறைவு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக உலகெங்கிலும் கிடைக்கும் சிறந்த தோல் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளை தேட தொடங்கினோம்.
இந்த தருணத்தில் ஜெர்மனி நாட்டில் கிடைக்கும் தோல் மற்றும் முடி பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதனுடைய பயன்பாடு நன்றாக இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாக இருந்தாலும் விலை கூடுதலாக இருந்தது.
இந்த தருணத்தில் கழுதை பால் குறித்தும், அதன் மருத்துவ குணம் குறித்தும் கண்டறிந்தோம். அதனுடன் மூலிகை சாறுகள் மற்றும் நானோ கூறுகளை இணைத்து முழுமையான புதிய தயாரிப்புகளை கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டோம். அதன்பிறகே வி-ஷோன் (V Schoen) தொடங்கினோம். (https://vschoensecrets.com/ )
இதன் மூலம் தொழில் நுட்ப ரீதியில் மேம்பட்டதாகவும், தரமான தோல் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளை குறைவான விலையில் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தையும் நிர்ணயித்துக் கொண்டு, இதனைத் தொடங்கினோம். அத்துடன் எங்களுடைய நிறுவன தயாரிப்புகளில் பண்டைய பாரம்பரியமும், நவீன அறிவியலும் இணையும் இணைப்புப் பாலம் என்ற வாசகத்தை இடம்பெற வைத்தோம்.
கழுதைப்பால் அதனை வெள்ளைத் தங்கம் என்றே குறிப்பிடலாம். இந்த வெள்ளை தங்கத்தை வைத்து நாங்கள் வெண்மை புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டோம். அதாவது கழுதை பாலை வைத்து எம்முடைய சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு பொருட்களை தயாரித்து மக்களை சென்றடைய திட்டமிட்டோம்.
வி-ஷோன் (V Schoen) அறிமுகப்படுத்தியிருக்கும் பொருட்கள் குறித்து..?
எங்களுடைய தயாரிப்புகள் அனைத்தும் சந்தையில் கிடைப்பதற்கு முன் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. எங்களுடைய அனைத்து தயாரிப்புகளிலும் உடலுக்கும், சருமத்திற்கும் கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப் படவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய தயாரிப்புகள் அனைத்தும் மக்களுக்கு முழுமையான பலனை வழங்கும். அத்துடன் நாங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக எந்த மாயஜால வித்தைகளிலும் ஈடுபட விரும்பவில்லை. எங்களுடைய வளர்ச்சியை சீரான அளவில் மேம்படுத்தவே திட்டமிட்டிருக்கிறோம்.
கழுதைப் பாலை பற்றி..?
கழுதை பாலை, ‘கழுதை பால்’ என்று குறிப்பிடுவதை விட ‘வெள்ளை தங்கம்’ என்று கூறுவது தான் பொருத்தமானது. ஏனெனில் கழுதைப் பாலில் விட்டமின் ஏ, விட்டமின் இ, விட்டமின் சி, விட்டமின் பி6, விட்டமின் பி1, கால்சியம், மெக்னீசியம், லாக்டோஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஜிங்க் எனப்படும் துத்தநாகம், ஒமேகா 3, ஒமேகா-6 ஆகிய ஊட்டசத்துக்கள் அடங்கியிருக்கிறது. அத்துடன் கழுதைப்பால் தாய்ப்பாலை போன்றே ஊட்டச்சத்து மிக்கது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பசும்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகளை விட, கழுதைப் பாலில் கூடுதலான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். விட்டமின்கள் நம்முடைய சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக முதுமையின் காரணமாக ஏற்படும் தோல் சுருக்கத்தை இந்த வெள்ளைத் தங்கம் முற்றாக தடுக்கிறது. அத்துடன் கழுதைப் பாலில் கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6 ஆகியவை அதிக அளவில் இருப்பதால் குண்டான தோல் உடையவர்கள் இதனை பயன்படுத்தும் பொழுது அவர்களது தோலில் சுருக்கங்கள் ஏற்படாமலும், ஈரப்பதத்தையும் பாதுகாக்கும் பணியையும் செவ்வனே செய்கிறது.
இதைவிட முக்கியமாக, இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு பணியை கழுதை பால் செய்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் பகல், இரவு என்று பாராமல் தங்கள் கைகளில் ஆறாம் விரலாக இருக்கும் ஸ்மார்ட்போனை கட்டுப்பாடில்லாமல், கண்களால் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் காரணமாக ஏற்படும் பார்வை திறன் குறைபாடு, கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையம் மற்றும் தோல் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் சக்தி வெள்ளைத் தங்கம் எனப்படும் கழுதை பாலுக்கு உண்டு.
நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ஏனைய அழகு சாதன பொருட்களின் பட்டியல் குறித்து..?
கழுதை பாலைக் கொண்டு Moroccan red clay Donkey Milk soap, Classic Donkey Milk soap, Tea Tree Oil Donkey Milk soap, Charcoal Donkey Milk Soap போன்ற நான்கு வகையான குளியல் சோப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இதை தவிர்த்து Age Reversal Day Cream & Age Reversal Night Cream எங்களுடைய தயாரிப்புகளில் மிக பிரபலம். “சார்கோல் டாங்கி”, “பயோ ஆலோவேரா”, ‘பயோ ஆலுவேரா குக்கும்பர் ஜெல்’, ‘பயோ ஆலுவேரா புட் க்ரீம்’, ‘பயோ ஆலுவேரா பப்பையா ஜெல்’ மற்றும் பிற அழகு சாதன பொருட்களையும் சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதற்கான வரவேற்பு நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கிறது என்பதையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
Web link : https://vschoensecrets.com/