ஆமா, நான் விஜய் சேதுபதியை சைட் அடிப்பேன், ஒத்துக்கொண்ட காயத்ரி

ஒரு படத்துல சேர்ந்து நடிச்சாலே, அந்த படத்தோட கதாநாயகனையும் நாயகியையும் இணைச்சு கிசுகிசு றெக்கை கட்டி பறக்கும் போது, ஒன்னு இல்லை, இரண்டு இல்லங்க, ஆறு படத்துல இணைஞ்சு நடிச்சிருக்கிற விஜய் சேதுபதியையும் காயத்ரியையும் லிங்க் பண்ணி பேசாம இருப்பாங்களா?

கோலிவுட் பூரா இப்படி ஒரு கிசுகிசு பரவி கிடந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலை படற மாதிரி இரண்டு பேரும் இல்லை போல. கடமையே கண்ணா இருவரும் இணைந்து நடிச்சு தள்ளிகிட்டே இருக்காங்க.

விரைவில் வெளிவர இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்துலயும், விஜய் சேதுபதியும் காயத்ரியும் சேர்ந்து நடிச்சிருக்கும் நிலையில, இதைப்பற்றி காயத்ரி கிட்ட கேட்ட போது, அவர் கிட்ட இருந்து வந்த போல்டான பதில் இது தான்:

“அவர் செல்லும் இடங்களில் எல்லாம் என் நடிப்பை புகழ்ந்து பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே எனக்கு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது.

ஷில்பா கதாபாத்திரம் (விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸில் நடித்துள்ள திருநங்கை வேடம்) எனக்கு மிகவும் பிடித்தது. விஜய் சேதுபதியை ஆண் தோற்றத்தில்கூட அந்த அளவுக்கு சைட் அடித்ததில்லை. ஷில்பாவை பயங்கரமாக சைட் அடித்தேன். டிரெய்லர் பார்த்தபோதுதான் அவரது உழைப்பு புரிந்தது.”

மேலும் அவர், “சூப்பர் டீலக்ஸ் டிரெய்லரில் அவரை பார்த்ததும் உங்களை பார்த்து பொறாமையாக இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துகிறார்,” என்று விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளினார்.

காதல், திருமணம் பற்றிய கேள்விக்கு, “எனக்கு இப்போது தான் கேரியரே ஆரம்பித்திருக்கிறது. ஆனால் கல்யாணம் செய்தால் நடிப்பை விட்டுவிட வேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை. அதனால், கண்டிப்பாகத் திருமணம் செய்தாலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், இப்போதைக்கு திருமண எண்ணம் இல்லை,” என்று காயத்ரி கூறினார்.