ஏ.எச்.காஷிஃபின் அல்லா பாடலுக்கு வரவேற்பு

ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான பதினெட்டாம்படி உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.எச்.காஷிப். காஷிஃப்பின் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஃபாத்திமாவின் மகனான காஷிஃபுக்கு இசைத்திறமை ஓங்கி இருப்பதில் வியப்பில்லை. சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல் தனி இசை பாடல்களிலும் காஷிஃப் தன் திறமையால் கொடி கட்டி பறக்கிறார். இவர் இசை உருவாக்கத்தில் காதலர் தினத்துக்காக உருவாக்கி வெளியிட்ட ஆல்பம் லட்சக்கணக்கான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது. அடுத்து ரெண்டகம், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துவரும் காஷிஃப் இந்த கொரோனா காலத்தில் ரசிகர்களை மகிழ்விக்க தன் புதிய ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். புனித ரமலான் பண்டிகையொட்டி அல்லா யா அல்லா என்ற அவரது ஆல்ப பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மாஷூக் ரகுமான் எழுதிய வரிகளுக்கு அமினா குரல் கொடுக்க அஸ்வின் ராம் இயக்கி உள்ளார்.