Vijay Sethupathi pays glorious tribute to late director S P Jananathan.
I wish I had spent more time with director S P Janananthan: Vijay Sethupathi.
Actor and producer Vijay Sethupathi on Friday paid rich tributes to director S P Jananathan at a media briefing organised at the Prasad Lab to promote the late director’s last film Laabam, which is to hit screens on September 9.
Participating in the event, Vijay Sethupathi, who plays the lead in Laabam, said director S P Jananathan’s loss was indeed a huge one and that his close associate, Mr. Aalayamani, turning emotional while delivering the welcome address was understandable.
“Nothing can console Mr Aalayamani, who has been with Director S P Jananathan from the start. I have known them from the time I was a junior artiste and knocked on their door for opportunities.”
The actor said that he felt like a sinner for not having spent more time with the late director. “I wish I had spent more time with director S P Jananathan. I didn’t know that time was such a curse. Had I known, I would have spent more time with the late director,” he said.
Describing the deep bond that they shared, Vijay Sethupathi said, “Director S P Jananathan and I had great understanding and love for one another. It was something like a father-son relationship. You don’t realise its significance when the person is there. If you have someone you cherish, please express your admiration and love for them.”
The actor also made it clear that the complete credit for such a thought provoking film must go to the late director. “If this film has come out well, the credit for it must all go to the late S P Jananathan sir.”
“I have known the producer of this film Aarumuga Kumar for over 12 years. I have produced four films but I don’t keep track of their budgets or accounts. This is because I fear that I will lose the art I have in me, if I develop a penchant for business or finance. I have a school friend called Chandrashekar who takes care of my accounts. I haven’t taken a salary for this film. I have got the good fortune of producing this film and I don’t know which forefathers’ noble deed of mine has fetched me this blessing,” Vijay Sethupathi explained.
The actor went on to say that director S P Jananathan believed that cinema was not just entertainment and that it was a lot more than that.
“He used to say that it makes people think and change. We come across so many instances where people have said, “This scene changed me or this scene got me thinking.” Art leads people to think and change. Therefore, he thought it was wrong to call cinema as just entertainment,” Vijay Sethupathi recalled.
Choosing to explain what Laabam was all about as envisaged by the late director, Vijay Sethupathi chose to read out certain lines S P Jananathan had himself penned about the film…
“I think the British came to India, looking at only its cultivation and farming practices being carried out in our country’s villages. If it were just gold or diamonds that they were after, they could have taken it and left. They were taking cotton and sugarcane being grown here for centuries together as there is a worldwide market for these goods.There are around 2000 sugarcane mills in India and all of them function with only sugarcane as the raw material.
“From the sugar they get from the sugarcane to the molasses that they make using sugar to the alcoholic varieties they make using molasses to the milk chocolate to the electricity that they generate to the paper they make from the chaff, all of them come from agriculture.
“There is nothing called waste with regard to agricultural produce. Therefore, there are several factories and industries running depending on the agricultural produce. Crores are being made. A farmer, who goes in the evening and stands in a queue to buy a bottle of alcohol, does not know that the beer or the brandy that he is buying is made from what he produced and that others are making huge profits. It is about this irony that Laabam speaks,” the actor read out.
The actor also thanked the Tamil Nadu government for having re-opened theatres. He said, “Lakhs of families comprise the film industry. I thank the government on behalf of all of them. I also wholeheartedly welcome all fans and film lovers back to the theatres.”
Earlier, a minute of silence was observed as homage to the great director.
The producer of the film, Aarumuga Kumar said, “Vijay Sethupathi and I have jointly produced this film. When I looked at the song and the trailer of the film on the big screen today, I was reminded of what director S P Jananathan used to tell me when he was alive. He would often say, “When you watch this on the big screen, it will give you another feeling altogether.” I realised today that what he had said then was absolutely true.
“SP Jananathan sir was a great lover of art. When we had problems like lockdown, he would insist in a firm voice that Laabam was a film for the simple and the downtrodden people and that we would have to give importance to releasing the film in theatres over OTT platforms. As per his wish, this film is to release in theatres.”
Speaking on the occasion, music director of the film, D Imman fondly recalled his association with the late director and the experience of composing music for the film.
He said, “The experience of working with director S P Jananathan is such a memorable one. Before becoming a known name in cinema, I had the opportunity to show my scratches to director R K Selvamani. He was very encouraging. And then, I scored music for my first film. After that, I had to struggle for my next opportunity. At that time, I was residing in Purasaiwalkam. It was at this time that director S P Jananathan sir came to my house, acknowledging the fact that I was a music director. He was was first director after my debut as a music director to place faith in my musical skills and come home.
“I got an opportunity to work with him in Laabam after a long time. Working with him was a learning experience. We would talk world politics. Jananathan sir was like an encyclopedia. His attention to detail was so impressive.There is a song in this film called Seruvom…Seruvom… . For this song, I had used a Chinese instrument called an Erhu. Usually, the musical instruments shown on screen in a song will vary from what we actually use for the recording. However, Jananathan sir took great pains to learn about this instrument and its appearance and the political history at the time of its origin. He made sure that the instrument shown on screen was in fact an Erhu. Despite being knowledgable and well read, he would pay great attention to learn about stuff that he did not know.
“Personally, it was a shattering experience when I had gone to see him at the hospital. That is because I had seen my mother in the same ICU, 12 years ago in the same situation. S P Jananathan sir was a wonderful human being and it is an irreparable loss to all of us that he has left us so early,” the music director said.
Several other actors and dignitaries including FEFSI President R K Selvamani, director R V Udhayakumar participated in the event and paid homage to the late director.
இயக்குனர் எஸ். பி. ஜனநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்திய ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி
கலை மனிதனை சிந்திக்க தூண்டுகிறது- விஜய்சேதுபதி
கிராமீயப் பொருளாதாரத்தைப் பற்றி ‘லாபம்’ படம் பேசுகிறது.= விஜய் சேதுபதி
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
உணவு அரசியல், விவசாயம் சார்ந்த அரசியல் மற்றும் கிராமீயப் பொருளாதாரப் பற்றி ‘லாபம்’ படம் பேசுகிறது என அப்பட நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி தெரிவித்தார்.
விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி, இயக்குனர் ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் உதவியாளரான ஆலயமணி விழாவிற்கு வருகைத்தந்தவர்களை நெகழ்ச்சியுடன் வரவேற்றார். முன்னதாக மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இசையமைப்பாளர் டி இமான் பேசுகையில்,’ லாபம் படத்தில் இயக்குனர் எஸ் பி ஜனநாதனுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதவை. திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்னரே என்னுடைய இசை சார்ந்த முயற்சிகளுக்கு இயக்குனர் ஆர் கே செல்வமணி பெரிதும் ஊக்கமளித்தார். பிறகு படங்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமான பின், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தேன் அந்த தருணத்தில், என்னையும் ஒரு இசையமைப்பாளராக அங்கீகரித்து, என்னுடைய வீட்டிற்கு இயக்குனர் ஜனநாதன் வருகை தந்தார். அந்தத் தருணத்தில் அவர் ‘இயற்கை’ படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் என்னையும், என் திறமையையும் நம்பி வாய்ப்பளிப்பதற்காக வீடு தேடி வந்த முதல் இயக்குனர் ஜனநாதன் சார் தான் என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் ‘லாபம்’ படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பாடல், பாடலுக்கான சூழல், அதற்கான பின்னணி, பாடல் வரிகள், மெட்டு, அதற்கான இசை… இதை கடந்து உலக அரசியலை குறித்து ஆர்வமுடன் விவரிப்பார். அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா கூகுள் போன்றவர். இந்தப்படத்தில் ‘சேருவோம் சேருவோம்..’ எனத் தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. இந்த பாடலை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழப் பெண் பாடகி கிளியோபாட்ரா என்பவர் பாடியிருக்கிறார். அது ஒரு ராப் இசை பாடல். இந்தப் பாடலில் எர்க்ஹு (Erhu) என்றொரு இசைக்கருவியின் இசை இடம்பெற்றிருக்கும். இது ஒரு சீன நாட்டை சேர்ந்த வயலின் இசைக்கருவி போன்றது. இந்த இசைக்கருவியின் அமைப்பு எப்படி இருக்கும்? எத்தனை தந்திகள் அதில் இருக்கும்? அதனுடைய செயல்பாடு? பயன்பாடு? இது குறித்த விபரங்கள் விவரங்களையெல்லாம் கேட்டறிந்தார். ஏனெனில் இந்த படத்தில் நாயகி சுருதிஹாசன் கிளாரா என்ற இசைக் கலைஞராக நடித்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பாடல் என்பதால், ஒரு பாடலை தொடங்குவதற்கு முன் உள்ள சூழல் அதாவது எந்த சுருதியில் தொடங்கலாம்? எந்த ராகத்தில் அமையலாம்? எந்த மாதிரி டெம்போவில் அமைக்கலாம்? எந்த மாதிரியான இசைக்கருவிகளை பயன்படுத்தலாம்? குழு இசை எப்படி பயன்படுத்தலாம்? என்றொரு விவாதம் நடைபெறும். இதனை இயக்குனர் ஜனநாதன் திரையில் காட்சிப்படுத்த விரும்பினார். இந்தக் காட்சியைப் படமாக்கும் போது மிக நுட்பமாக எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்…? நான் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறேன். இது சரியா..? என விளக்கமாக கேட்டறிந்து கொண்டு படமாக்கினார். இந்த பாடல் காட்சியின் போது எர்க்ஹு என்ற இசைக்கருவியை அதே தோற்றத்தில் பயன்படுத்தியிருந்தார். இந்த இசைக்கருவி எப்போது தோன்றியது? அந்த காலகட்டத்தில் அரசியல் மற்றும் சமூக சூழல்? இதனை யார் பயன்படுத்தினார்கள்? எதற்காக பயன்படுத்தினார்கள்? என்ற விவரங்களை எல்லாம், என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, அவர் இதனை ஆழ்ந்து கவனமுடன் கேட்டறிந்தார். ஒரு படைப்பை நூறு சதவீதம் நேர்த்தியாக திரையில் உருவாக்கிய படைப்பாளி ஜனநாதன் சார் என சொல்லலாம்.
பாடல் உருவாக்கத்தின்போதும், மற்றைய தருணங்களிலும், எப்போதும் அவருடன் அவருடைய உதவியாளர் ஆலயமணி உடனிருப்பார். பாடல் வரிகள் உருவாக்கத்தின் போதும், இசைக்கருவிகள் பயன்படுத்தும்போதும் ஆலயமணி அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.
அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அனுமதிக்கப்பட்டிருந்த காட்சி எனக்கு உணர்வுரீதியாக இணைந்திருந்தது. அதே மருத்துவமனை… அதே தீவிர சிகிச்சை பிரிவில்.. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சிகிச்சைப் பெற்று,மறைந்ததை நினைவூட்டியது. இது எனக்கு மேலும் மன பாதிப்பை ஏற்படுத்தியது. ஆகச் சிறந்த மனிதர் அவர் இவ்வளவு விரைவாக நம்மிடமிருந்து பிரிந்து சென்றது சொல்லமுடியாத= தாங்க முடியாத இழப்பு. இதனால் மனம் கனக்கிறது.
இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அவர் ஒரு நடிப்பு அரக்கன் என்று குறிப்பிடலாம். எந்த கதாபாத்திரம் அவரிடம் வழங்கப்பட்டாலும், அதனை தன்னுடைய பாணியில் வழங்கி, ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பார். அவருடைய அபார நடிப்புத் திறமைக்கு நானும் ஒரு பரம ரசிகன். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, சிறந்த தயாரிப்பாளரும் கூட. தயாரிப்பாளர் ஆறுமுக குமாருடன் இணைந்து இப்படத்தை நேர்த்தியாக தயாரித்திருக்கிறார். இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.’ என்றார்.
தயாரிப்பாளர் ஆறுமுகக் குமார் பேசுகையில்,’ லாபம் படத்தை நானும் விஜய் சேதுபதியும் இணைந்து தயாரித்திருக்கிறோம். இப்படத்தை ஜனநாதன் இயக்கியிருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்க்கும் போது, அவர் அடிக்கடி என்னிடம் கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. ‘ சார். இதை பெரிய திரையில் காணும் பொழுது வேறு வகையான உணர்வைத் தரும்’ என்பார். அது உண்மை என்பதை இன்று நான் உணர்கிறேன். முன்னோட்டத்தை 50 முறை மேல் பார்த்திருக்கிறேன். இந்தப்படம் எமக்கு ஒரு மிகப் பெரிய அனுபவம். ஜனநாதன் சார் ஒரு மிகப்பெரிய கலை ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்றியதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. அனுபவத்துடன் மகிழ்ச்சியையும் தருகிறது.
லாக்டௌன், ஓ டி டி என்ற பிரச்சனை எழுந்த போதெல்லாம் என்னிடம் அவர்,‘ லாபம் எளிய மக்களுக்கான திரைப்படம். இதனை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என அடிக்கடி உறுதியான குரலில் சொல்வார். அவரது ஆசைப்படி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட லாபம் யாருக்கு? எங்கு? எப்போது போய் சேர வேண்டுமோ… அவரின் ஆசியுடன் அது சரியாக சென்றடையும். தற்போதைய சூழலில் ஒரு படத்தைத் தயாரிப்பது மிகப் பெரும் போராட்டம். அனைத்தையும் கடந்து தடைகளைத் தாண்டி உங்களை வந்தடைய இருக்கிறது. திரைத்துறை ஆரோக்கியமாக பயணிக்க அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு தாருங்கள். வெற்றிபெற செய்யுங்கள்.’ என்றார்.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசுகையில், ‘இங்கு வருகை தந்து சிறப்பித்த அனைவரும், மறைந்த இயக்குனர் ஜனநாதனின் நினைவுகளை வார்த்தைகளாக மாற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வரவேற்புரை பேசத் தொடங்கி, உணர்வு மிகுதியால் தொடர்ந்து பேச இயலாத ஆலயமணி அவர்களின் உணர்வுதான் அனைவருக்கும். ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வாய்ப்பு தேடிய காலகட்டத்திலிருந்து அவரை சந்தித்தது முதல் அவரது மறைவு வரையிலான இந்த காலகட்டம் மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் இடையிலான உறவையும் வார்த்தைகளால் குறிப்பிட இயலாது. அவரின் மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.
எனக்கும் அவருக்குமான உறவு தந்தை= மகன் போன்றதொரு உறவு. அருகில் இருக்கும் பொழுது அதன் அருமை தெரியாது. தூரத்திலிருந்து நான் அவரை நேசித்துக் கொண்டே இருந்தேன். காலம் எப்படி படு பாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரைப் பற்றி தெரிந்திருந்தால்… புரிந்து கொண்டிருந்தால்.. அவருடன் நிறைய நேரம் செலவிட்டிருப்பேன். அவருடன் நன்றாக பழகத் தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் அதிகமாக அன்பு பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும் என தற்போது நினைக்கிறேன். சில நேரங்களில் மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதை பயன்படுத்தி இருக்கலாம். நான் அதை தவற விட்டிருக்கிறேன். யாராவது உங்கள் மீது அன்பு பாராட்டினால், அவர்களை நீங்கள் புரிந்து கொண்டால்.. அவரிடம் சென்று நிறைய நேரத்தை செலவிடுங்கள் அன்பை பயன்படுத்தி உறவை மேம்படுத்துங்கள்.
இந்தப் படத்தில் பணியாற்றியது அற்புதமான அனுபவம் என அனைவரும் தெரிவித்துவிட்டனர். இதை கடந்து என்னிடமும் இதை பற்றி கூற புதிய வார்த்தை எதுவும் இல்லை. இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அது அதன் முழு பொறுப்பும் தலைவர் ஜனநாதனையே சேரும்.
இங்கு பேசும்பொழுது ஆர்கே செல்வமணி, ஜனநாதனின் தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய கதையை படமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் என்னுடைய அனுபவத்தின் படி ஜனநாதன் ஒரு கதையை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி மாற்றி யோசித்து எழுதக்கூடிய படைப்பாளி. ஒவ்வொரு படத்திலும் பெரும் மாற்றங்களை செய்துகொண்டே இருப்பார். படத்திற்காக உழைத்துக் கொண்டே இருப்பார். புதிய புதிய செய்திகளை தெரிந்துகொண்டு அதனை படைப்பில் இணைத்துக் கொண்டே செல்வார். அதனால் அவர் எழுதிய தஞ்சாவூர் கோயில் பற்றிய கதையை படமாக்குவதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அவர் பணியாற்றும் ஸ்டைல் எனக்கு தெரியும்.. தினமும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அதனால் இதுதான் கிளைமாக்ஸ்… இதுதான் இடைவேளை காட்சி… இதுதான் வசனம்… என்று எந்த வரையறையும் அவரிடம் இருக்காது. அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். படப்பிடிப்பில் ஒரு வசனம் பேசியிருப்போம் அதனை பின்னணி பேசும் பொழுது மாற்றி பேச வைத்து காட்சியின் சுவையை மேம்படுத்தியிருப்பார். அதனால் அவரை எளிதில் கணிக்க முடியாது.
இப்படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுகக்குமாரை எனக்கு 12 ஆண்டுகளாக தெரியும். இதுவரை நான் நான்கு படங்களை தயாரித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் பட்ஜெட் என்ன என்று எனக்கு தெரியாது. அதைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் இல்லை. ஏனெனில் அதை தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டினால், என்னுள் இருக்கும் கலை இறந்துவிடும் என்ற பயம் எனக்குள் இருக்கிறது. இது என்னுடைய சொந்தப் பிரச்சனை. இதனால் பண வரவு விஷயத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ளலாம். ஆனால் தொழில் பலவீனம் அடைந்தால்.. என்னால் தாங்கிக் கொள்ளவே இயலாது. அத்துடன் என்னால் ஒருபோதும் என்னை இழக்க முடியாது. என்னுடன் என்னுடைய பள்ளிக்கூடத் தோழன் சந்திரசேகர் இருக்கிறார். அவர்களிடம் இந்த பொறுப்பை விட்டு விடுகிறேன். இந்தப்படத்தில் நான் சம்பளமாக எதையும் பெறவில்லை. எடுக்கவும் இல்லை. இந்த திரைப்படம் நல்லபடியாக வெளியாக வேண்டும். என்னுடைய தாய் தந்தையர், தாத்தா பாட்டி போன்றவர்கள் செய்த புண்ணியத்தால் ‘லாபம்’ படத்தில், ஜனநாதன் சார் இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.
ஜனநாதன் சார் ‘ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்கு’ என்று சொல்வதை ஒப்புக் கொள்ள மாட்டார். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லையும் கடந்து, பார்வையாளர்களை ஏதேனும் ஒரு விஷயத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை திரைப்படத்தைப் பார்க்கும் பலரும் பல தருணங்களில் இந்த காட்சி என்னை மாற்றியது. இந்தக் காட்சி என்னை யோசிக்க தூண்டியது… இந்த காட்சி என்னை மனிதனாக்கியது.. என சொல்வதை கேட்டிருக்கிறோம். அது எந்த மொழி படமாக இருந்தாலும் பரவாயில்லை. திரைப்படம் ஏதோ ஒரு வகையில் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் மனிதனின் உணர்வுகள், ஒரே வகையான தாக்கத்தை ஏற்படுத்தி நம் மனதை தொடுகிறது. அதனால் திரைப்படம் சாதாரண பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது அதையும் கடந்து ஏதேனும் ஒரு பாதிப்பை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது. மக்கள் சிந்திக்க வேண்டியவற்றை பிரதானமாக எடுத்துச் சொல்வது கலை வடிவங்கள்தான். ஒரு நகைச்சுவை காட்சி கூட ரசிகர்களை யோசிக்க வைக்கும். அதனால் கலையை சாதாரண பொழுது போக்கு அம்சம் என்ற கோணத்தில் மட்டும் அணுகாதீர்கள்.
கலை என்னை சிந்திக்க வைத்தது. அதனால் இத்துறையில் அடி எடுத்து வைத்தேன். இதுதான் என்னுடைய வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். அதனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள். அதிலிருக்கும் எந்த சிந்தனை சிறந்தது? எது பலவீனமாக இருக்கிறது? என்பதை உணர்ந்து, திறனாய்வு செய்ய பழகிக் கொள்ளுங்கள். என்னுடைய வாரிசுக்கு இதைத்தான் நான் கற்றுக் கொடுக்கிறேன். ஒரு விஷயத்தை குறை சொல்வதன் மூலமாக நம்மை நாமே புத்திசாலிகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒருவரை குறை சொன்னால் நான் புத்திசாலி ஆகி விடுகிறேன். கலை மனிதனை சிந்திக்க வைக்கிறது அதனால் தான் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.
மேலும் இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்வதை விட, மறைந்த இயக்குனரும் என்னுடைய தலைவருமான இயக்குனர் ஜனநாதன் பல்வேறு பேட்டிகளில் சொன்னதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
‘ சேத்துல கால் வச்சாதான் சோத்துல கை வைக்க முடியும் என விவசாய பத்தி சொல்லி சுருக்கிட்டாங்க. நான் விவசாயத்தை எப்படி பார்க்கிறேன்னே.. பிரிட்டிஷ்காரன் இந்தியாவுக்கு வந்தததே.. இந்த கிராம பகுதியில் நடக்கிற விவசாயத்தை பார்த்துதான். தங்கம் மாதிரி பொருளாய் இருந்தா.. அவன் எப்பவோ எடுத்துட்டு போய் இருக்கலாம். ஆனா இந்த மண்ணுல முன்னூறு நானூறு வருஷமா பருத்தியை எடுத்து கிட்டே இருக்காங்க. கரும்பை எடுத்துகிட்டே இருக்காங்க. இதுக்கு உலக அளவுல மார்க்கெட் இருக்கிறதால.. இன்னும் கூட எடுத்துகிட்டு இருக்காங்க. இந்தியா முழுக்க சுமார் 2000 சர்க்கரை ஆலை இருக்கு.. இவை அனைத்தும் கரும்பை மூலப்பொருளாக வைத்துதான் இயங்குது இந்த கரும்பிலிருந்து வர்ற சர்க்கரை, சர்க்கரையிலிருந்து வர்ற மொலாசஸ், மொலாசஸிருந்து வர்ற ரம், ஜின், பிராந்தி, பால் கலந்த சாக்லேட், இதுல வர்ற மின்சாரம், அத தொழிற்சாலைக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்வது, கரும்பு சக்கையிலிருந்து பேப்பர் தயாரிப்பது என எல்லாமே விவசாயத்தில் இருந்து தான் கிடைக்கிறது.’
‘பஞ்சாலை, கரும்பாலை என விவசாயத்திலிருந்து வர்ற எந்த பொருளாக இருந்தாலும் சரி வேஸ்டேஜ் அப்டின்னு ஒன்னும் இல்ல. பல நாடுகள் தங்களுடைய வேஸ்டேஜ் கொட்றதுக்குன்னு சில நாட்ட செலக்ட் பண்ணி பயன்படுத்தறாங்க. நம்ம நாட்டுக்கும் கன்டெய்னர் கன்டெய்னரா ஏராளமான வேஸ்ட் அனுப்புறாங்க.’‘
அதனால விவசாயத்தை நம்பி பல தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கு. கோடிக்கணக்கான பணம் புழங்கிக் கொண்டிருக்கு. சோத்து பிரச்சனை இல்லை. வெளவிச்சு பயிரிட்ட விவசாயி, அதுல உருவான பாட்டில வாங்கி குடிக்க சாய்ந்தரம் ஆனதும் க்யூவுல போய் நிற்கிறான். இது என்னுடைய உற்பத்தி செஞ்சு வர்ற பொருளிலிருந்து தான் பீராவும், பிராந்தியாவும் இங்க வித்து லாபம் சம்பாதிக்கிறாங்கன்னு விவசாயிக்கு தெரியல அதைதான் இந்த படம் சொல்லுது.’ என்றார்.
அனைத்தையும் கடந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி. இது ‘லாபம்’ படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. திரைத் தொழில் என்பது பல லட்சம் குடும்பங்களின் உழைப்பை உள்ளடக்கியது. இவர்களின் அனைவரின் சார்பாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வருக! வருக! என மனமார வரவேற்கிறேன்.’ என்றார்.