விஜய் சேதுபதியின் நக்கல், விஸ்வரூபமெடுக்கும் சிக்கல்
தான் உண்டு தன் வேலை உண்டுனு போயிட்டு இருந்த விஜய் சேதுபதிக்கு தன் வாயாலயே சிக்கல் ஏற்பட்டிருக்கு. சபரிமலை கோயிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பா அவர் தெரிவிச்ச கருத்துகள் அவருக்கு வினையா முடிஞ்சிருக்கு.
பக்தர்களோட பலத்த எதிர்ப்புக்கு மத்தியில, கேரள கம்யூனிஸ்ட் அரசு சமீபத்துல பெண்களை சபரிமலை கோயிலுக்குள்ளே அனுமதிச்சது. இது தொடர்பா படபிடிப்புக்காக கேரளா சென்ற நடிகர் விஜய் சேதுபதியிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “மாதவிலக்கு காலத்தில் பெண்கள் கடுமையான வலிகளை தாங்கிக்கொள்கின்றனர். ஆணாக இருப்பது எளிது. ஆனால் பெண்ணாக வாழ்வது அப்படி அல்ல. சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்- மந்திரி சரியான முடிவு எடுத்துள்ளார். இதனை எதற்காக சர்ச்சையாக்குகின்றனர் என்று புரியவில்லை” என்றார்.
மேலும் அவர், “நான் முதல்வர் பினராயி விஜயனின் ரசிகன். சபரிமலை விவகாரத்தில் அவர் மிகச் சரியான முடிவை எடுத்துள்ளார். நம் அனைவருக்கும் தெரியும் பெண்களின் அந்த வலி எதனால் வருகின்றது என்று. நாம் அனைவரும் அந்த வலியில் இருந்துதான் வந்தோம்.
அது மிகவும் புனிதமானது. அந்த வலி இல்லையெனில் இங்கு ஒரு மனிதர் கூட இருக்க முடியாது. பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆணாக வாழ்வது மிகவும் சுலபம். ஆனால், ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கடினமானது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்”னு கூறியுள்ளார்.
இது ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கு. அவரோட ரசிகர்களும், பெண்களுமே அவருக்கு எதிர்ப்பு தெரிவிச்சு இருக்காங்க. சமூக வலைத்தளங்களில் அவர்கள் விஜய் சேதுபதி வரலாறு தெரிந்து பேச வேண்டும். மக்களின் மத நம்பிக்கையை உணருங்கள். பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது, கேரள முதல்வர் எடுத்த முடிவு சரியல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கேரள சமூக வலைதளங்களிலும் விஜய் சேதுபதி குறித்த கருத்துகளே அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அவர் நடிச்ச படங்களை புறக்கணிக்க போவதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமில்லாம, சில பேர் வழக்கு தொடரவும் ஆலோசிச்சிட்டு வர்றாங்களாம்.
இதற்கிடையே, ன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார் விஜய்சேதுபதி என்று ’96’ படத்தின் 100-வது நாள் விழாவில் திருமுருகன்காந்தி புகழாரம் சூட்டினார். இதனால், தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிரா செயல்படும் திருமுருகன்காந்திக்கும், விஜய் சேதுபதிக்கும் தொடர்பிருக்குமோன்னு சிலர் சந்தேகப்படறாங்க.